கடகம் ராசி

இந்தப் புத்தாண்டில்,  ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில்  இந்த ஆண்டு மேம மாதம் 16-ம் தேதிவரை சஞ்சரிக்கிறார்.  அதன்பின் அதாவது, மே மாதம் 17-ம் முதல், குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்குப் போகிறார்.  சனி பகவான் சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி உச்ச சனியாக சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 1 , 6 மற்றும் 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதன் விளைவாக உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது  வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு  விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம்.. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். எட்டுக்கு அதிபதியான சனி ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு இப்போது வந்து சேரும். கடன் பாக்கிகள் வசூலாகும். பகையான நட்பு உறவாகும். பத்தாம் இடத்தை சனி பார்ப்பதால், உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

இனி ராகு கேது சஞ்சாரங்களைப் பார்க்குமிடத்து ராகு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், தனது ராசிக்கு 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்க்கிறார். தனது 11-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடமான விருச்சிகத்தில் உலாவரும் ராகு பகவான் பலவகையான கற்பனைகளை உங்கள்  மனதில் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். அதை சாதிக்க வேண்டும், இதை சாதிக்க வேண்டும் என்று செயல்பாட்டுக்கு வரமுடியாத , செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஜனன காலத்தில் 5-ம் இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருக்குமானால், தற்சமயம் அவர்களுக்கு , புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வண்டி வாகனம் வாங்கி பவனிவர வாய்ப்புண்டு. சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். சிலர் புதிய வீடு, மனை, நிலம்  ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும். திருமணம் ஆகாத வாலிப  வயதினராக இருந்தால், இந்த சமயத்த்ல் காதல் வயப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த காதல் ஜோடி வேற்று மதத்தினராகவோ, அல்லது வேற்று இனத்தவராகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தக் காலத்தில் திருமணமாகி ,புத்திரப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.ஆனால், 5-ம் இடத்தில் செவ்வாயோ ,சூரியனோ அமர்ந்து இருந்தால்,உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் சுய வீடாக இருந்தால், சிறு உயர்வைக் காட்டி, பின்பு மோசமான பலன்களாக கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். தொழில் ரீதியாக எதிர்பாராத முன்னேற்றத்தைக் கொடுப்பார். ஆனால், 5-ம் இடத்தில் சூரியன் இருப்பாரேயானால், கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராகு பகவானுக்கு உங்கள் 5-ம் வீடான விருச்சிகம் உச்சவீடு என்பதால், ராகுவுக்கு உரிய கோச்சார பலன்களைக் கொடுக்காமல், சிறப்பான பலன்களைக் கொடுப்பார். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளச் செய்வார். குடும்பத்தாரின் தேவைகளை காலம் அறிந்து பூர்த்தி செய்து வைப்பீர்கள். அதன்பலனாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதுடன், குடும்பத்தினரின் அன்புக்கும் ஆதரவிற்கும் பாத்திரம் ஆவீர்கள். புதிய நண்பர்ள், புதிய உறவுகள் என்று உங்கள் பழக்கங்கள் விரிவடையும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளை உரிய பெரிய மனிதரை அணுக்கி தீர்த்துக்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை ராகு பார்ப்பதால், உங்கள் மனோபலம் மேன்மையடையும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு அல்லது சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.

மொத்தத்தில் 5-ம் இட்த்தில் ராகு சஞ்சரிக்கும்போது திடீர் வருமணம் கிடைக்கும். நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். வீணான மனக் கசப்பும் அலைச்சலும் ஏற்படுவதற்கன வாய்ப்புகள் உண்டு. கோர்ட், கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலைச்சல் மனக்கவலை ஏற்படும்.  உறங்கக்கூட நேரமில்லாமல் போகலாம். கணவன்- மனைவி  உறவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

இனி கேதுபகவானின் சஞ்சாரம் எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.  இதுவும் உங்களுக்கு நற்பலன்ளாகவே இருக்கும். எதிர்பாராதவிதமாக தன லாபம் கிடைக்கும். சிலர் புதிய நூதனமான தொழில் ,வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். புதிய நண்பர்கள்  நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு நல்ல விஷயங்களாகவே இருக்கும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களின் ஆசியும் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டு. மூத்த சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நல்ல பெயரும், சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்பட வும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அரசியல்வாதிகள், அரசுத் துறையில் உள்ளவர்கள், கௌரவமிக்க பெரியவர்களின் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. இந்த காலகட்டம் தாய்க்கோ அல்லது தாய்வழி உறவினருக்கோ அல்லது தகப்பனாருடைய தாய்க்கோ உகந்த காலம் அல்ல. அவர்களுக்கு தீய பலன் ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் கேஸ்களுக்கு உங்கள் பக்கம் தீர்ப்பு வந்து சுமுகமாக முடியும்.

ஜனன காலத்தில் ரிஷபத்தில் மாந்தி இருப்பவரக்ளுக்கு பலவழிகளிலிருந்தும் திடீர் திடீரென வருமானம் வந்துகொண்டிருக்கும். குரு ஜனன காலத்தில் ரிஷபத்தில் இருப்பாரானால்,  புத்திரர்களால் கவலை, புத்திரர்கள் முன்னேற்றத்தில் தடை . பூர்வீக சொத்தில் விவகாரங்கள் போன்றவை ஏற்படும்.  அதுபோல சுக்கிரன் இருந்தால், தாயார் மேன்மை அடைவார். ஆடை- ஆபரணச் சேர்க்கை, வீடு, மனை ,சொகுசு வாகனங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். செவ்வாய் இருக்குமானால், அரசு-கௌரவம், கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் அரசு உத்தியோகம் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த கால கடட்த்தில், ஆன்மீக நாட்டமும், தெய்வபக்தியும் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். தீய நண்பர்கள் யாராவது தற்சமயம் உங்களுடன் இருந்தால் , அவர்கள் உங்களை விட்டுப் போய்விடுவார்கள். உங்களுடைய பகைவர்கள் கூட உங்களிடம் ஒட்டி உறவாடி உங்களிடம் ஆதாயம் தேட முனைவார்கள். சிலருக்கு அரசியல் ஈடுபாடு அதிகமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். சிலர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வர். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்க வழியுண்டு. இந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் உண்டு. கேதுவின் பார்வை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் பதிவதால், தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

இனி குருவின் சஞ்சார பலன்களைப் பாக்கும்பொழுது, குரு இந்த வருடம் மேமாதம் 16-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் அதன்பிறகு  அதாவது மே மாதம் 17-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளார்.  குரு 10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு  கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை  கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக,  வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பொருளாதாரம் சிறக்கும். சேமிப்பு மிகுதியாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ஏற்கெனவே கூறியபடி, மே மாதம் 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் அமரப் போகும் குரு, உங்களுக்கு நற்பலன்களாகவே வாரி வழங்குவார். . உங்கள் காட்டில் அடைமழைதான்!. இதுவரை முடிக்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் முடித்து வைப்பார். உங்கள் எண்ணங்கள் ,கனவுகள் அத்தனைக்கும் செயல்வடிவம் கொடுத்து வாழ்க்கையில் உன்ன்னத நிலையை அடைவீர்கள். மண்ணைத் தொட்டாலும் இனிமேல் பொன்னாகும் நேரம் வந்துவிட்டது. புதிய தொழில் தொடங்குவதற்கு இதுநாள்வரை இருந்துவந்த தடை நீங்கிவிட்டது. தொழிலில் அபரிமிதமான லாபம் காண்பீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் , இதுவரை உள்மாநிலத்தில் மட்டும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு இனி வெளி மாநிலத்திலும் தொழிலை விரிவுபடுத்துவர். சிலருக்கு இதுவரை கூட்டுத் தொழில் நடத்தி வந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தானே முழுப் பொறுப்பையும் ஏற்று கம்பெனியை நடத்திச் செல்லும் யோகத்தையும் பெறுவீர்கள். அன்னிய பாஷை பேசுபவர்களுடன் வியாபாரத் தொடர்பும், நட்பும் ஏற்படும். இதுவரை இளைய சகோதரர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் படிப்பிலும் ,பிற துறைகளிலும் சிறந்து விளங்கி நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். விட்டுப் பிரிந்த நண்பர்கள்மீண்டும் உதவி செய்ய முன் வருவார்கள். மனைவியின் ஆலோசனைகளும் உதவியாக இருக்கும். தந்தையுடன் இருந்த பிரச்சினைகள் அகன்று அவரின் ஒத்துழைப்பும் மூத்த சகோதரரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு விருப்பமான பணி உயர்வும் விரும்பிய இயடமாற்றமும் கிடைக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வீடுதேடிவந்து கதவைத்தட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்து உங்கள் கைக்கு வரும். அல்லது அந்த சொத்தின்மூலம் ஒரு பெரும் தொகை உங்கள் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றி காண்பீர்கள்.

இப்படியாக  மே மாத பாதிவரை குரு பாதகமாக இருந்தாலும், பிற்பாதியில் சுபிட்சம் பெருகும். ராகுவும், கேதுவும் கூட சாதகமாக இருப்பதாலும், சனி, உங்களுக்கு நாலாம் இடத்தில் சஞ்சரித்தாலும் உச்சவீட்டில் அமர்ந்துள்ளதால், உங்களுக்கு எந்த கெடுதியும் உண்டாக வாய்ப்பில்லை.  நற்பலன்களே மிகுந்து காணப்படும். எனவே இந்த புத்தாண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாகவே இருக்கும்.

பரிகாரம்:

சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து  மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும். சனி  நாலாம் இடத்தில் சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் சந்நிதிக்கு சென்று, எள் தீபம் ஏற்றி, வழிபடவும். காக்கைக்கு தினந்தோறும் அன்னமிடவும். வயதானவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யவும். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’வை தினந்தோறும் பாராயணம் செய்யவும்.

யோகங்கள் பலவும் பெற்று, இந்தப் புத்தாண்டில் பல்லாண்டு வாழ்க!.