மகர ராசி

இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல ஆண்டாகவே இருக்கும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் மே மாதம் 16-ம் தேதிவரையும்,  மே மாதம் 17-ம் தேதி முதல் 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். சனி உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும்,.கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள் .இனி பலன்களைப் பார்க்கலாம்.

கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது நல்லதல்ல. அதுபோல குரு உங்கள் ராசிக்கு மே மாதம் 16-ம் தேதிவரை 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதும் சரியில்லை. இதனால், புத்திர –புத்திரிகள் வகையில் பலவித மனக் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருடைய புத்திர –புத்திரிகள் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் புதல்வர்களின் விஷயத்தில் செலவினங்கள் அதிகரிக்கும். நீங்கள் போதைப்பொருள் உபயோகியத்து அதிலிருந்து விடுபட முடியாமல், அதிலேயே அமிழ்ந்துபோய்விட நேரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினைகளும் வில்லங்கங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வழியுண்டு. சூதாட்டத்தில் மயங்கி அதில் வரும் சொற்ப லாபத்தை நம்பி, மீண்டும் மீண்டும் அதிலேயே மயங்கிஈடுபட்டு கைப்பொருளை இழப்பீர்கள். லாகிரி வஸ்துக்களை விட்டுவிடாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்வீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் இழுபறி ஏற்படும். சிலருக்கு மந்திர தந்திரங்களில் ஆர்வமேற்படும். மாணவர்கள் கல்வியில் நாட்டம் குறைந்து காதல் விஷயங்களில் மாட்டிக்கொண்டு படிப்பை கெடுத்துக்கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படக்கூடும். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தலைவலி, தலையில் கட்டி, காய்ச்சல் போன்ற தலை சம்பந்தமான நோய்கள் உண்டாகும். சிலரது குடும்பத்தில் பாகப் பிரவினை ஏற்படும். உங்கள் பங்கு சொதப்பப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பத்துக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வரும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தாலும், அரசு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் பாதிப்புகள் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். உங்கள் தந்தையே பிரச்சினைக்கு காரணமாகக்கூட இருக்கும். சொத்து சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும். சொத்து சம்பந்தமாக வம்பு வழக்குகள் வந்து சேரும். உறவுகள் பகையாகலாம். தேவையான சமயத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால், சிரமங்கள் தலை விரித்தாடும். உங்கள் சொந்த பந்தங்களிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்ட்டினீர்கள் என்றால் , அவர்கள் உங்களைவிட்டுப் பிரிந்துபோய்விடுவார்கள். எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும் விரயச் செலவுகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.கல்வியில் மந்த நிலை ஏற்படுவது மட்டுமின்றி கிடைக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் இருந்த வேலை வாய்ப்புகூட தவறிப்போகும். இதன் காரணமாக உங்கள் மனதில் துக்கம் மேலோங்கும். இதைக் காரணமாக வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தினர் உங்கள் மனம் புண்படும்படி , உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி உங்களை நோக அடிப்பார்கள். சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் யாருக்கும் பண விஷயத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப்போட்டால் அவர்களுக்காக சிறை செல்லக்கூட நேரும்.அல்லது அவர்கள் கடனை நீங்களே அடைக்க வேண்டியிருக்கும். இந்த ராசியில் உள்ள தாய்மார்கள் நகைகளைப் போட்டுக்கொண்டு கூட்டத்தில் போனால், நகைகளைத் திருட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சிலர் தங்களுடைய பணக் கஷ்டத்திற்காக நகைகளை விற்க வேண்டியிருக்கும். சிலருக்கு அவர்களுடைய வண்டி அடிக்கடி பழுதுபட்டு ரிப்பேர் செலவு வைக்கும். சிலருக்கு கால்நடைகளால் செலவு ஏற்படும். சிலர் தங்கள் நிலம் , வீடு இவைகளை விற்கவேண்டிய சூழ்நிலை வரும். சிலருடைய தந்தைக்கு சில பிரச்சினைகளும் வில்லங்க விவகாரங்களும் ஏற்படும். உள்ளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் சில பிரச்சினைகள் இப்போது வெளியே வரும். தாயாருக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய் வழி உறவினர்களுடன் பகையும் கருத்துவேறுபாடுகளும் ஏற்பட்டு கலகத்தில் முடியும். சிலருக்கு குல தெய்வ வழிபாடுகளும் தெய்வகாரியங்களும் தட்டிப்போகும். சிலர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்து அது பாதியில் நின்று போகும். வீடு கட்டும் கட்டுமானப் பணிகளும் தடைப்படும்.  குருமார்கள், சாதுக்களின் தரிசனம்கூட தட்டிப்போகும். உங்களுடைய புத்திசாலித்தனம் இப்போது பயன்படாது. சகோதரர்களால் விரயமும் துன்பமும் ஏற்படும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் பிரயாணங்களால் பைசா பிரயோசனம் இருக்காது. தேவையற்ற வம்பு வழக்குகள் , வீணான சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு மன நலம் ,உடல்நலம் பாதிக்கப்படும். நீதிமன்றத் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

இனி நற்பலன்களைத் தரக்கூடிய கிரகங்களான சனியும், ராகுவும் மே மாதம் 17-ம் தேதிக்குப்பின் சஞ்சாரம் புரியக்கூடிய குருவும் என்னென்ன நற்பலங்களை வழங்குவார்கள் என்று பார்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். அதன் காரணமாக தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். இந்த சமயத்தில் உங்களுக்கு பல வ்ழிகளிலிருந்தும் வருமானம் வரக்கூடும். இதன் மூலம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்பட்டு நாணயமானவர் என்று பெயரெடுப்பீர்கள். பணியாட்கள் விசுவாசமாக இருப்பார்கள். பெண்களால் நன்மையும் ,புத்திரர்களால், மனதுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். அலுவலகத்த்ல் பணிபுரிபவர்களுக்கு து சிறப்பான காலமாகும். விரும்பிய இடமாற்றம், பணிஉயர்வு, ஊதிய உயர்வு முதலியவை கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதோடு உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து அரிய வெகுமதிகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.புதிய வாகனமும், கால்நடைகளும் அமையும். ஆடை ஆபரணங்கள் விலை உயர்ந்த பொருள்கள் யாவையும் வாங்கிக் குவிக்கும் நேரம் இது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பினால் நல்ல லாபம் அடைவார்கள். சிலர் வீடு கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வார்கள். சிலருக்கு நிலங்கள்,வீட்டு மனைகள் தேடி வரும்.

தாயார் மேன்மை அடைவார். சிலருக்கு தாயார் மூலமாக பல நன்மைகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பொருளாதார ரீதியாக தடைப்பட்ட கல்வி தற்போது தொடர்வதற்கான வாய்ப்பு உண்டு. கல்வி ஸ்தாபனங்களில் வேலை பார்ப்பவர்கள் இப்போது மேன்மை பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு, கோவில் குளங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் முதலியவற்றை மேற்கொள்வார்கள் .சிலர் இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டுவார்கள். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்களது பெருமை இப்போது உங்களது தெவீகத் திருப்பணிகள் மூலமும், சமூக சேவைகள் மூலமும் வெளி உலகுக்குத் தெரியவந்து குன்றின் மேலிட்ட விளக்காக ஜொலிப்பீர்கள். இதுவரை உங்களைவிட்டு விலகி இருந்த உற்றார் உறவினர்கள் இனி உங்களைத் தேடி வருவார்கள். இதன் காரணமாக வீட்டில் விருந்தினர் வருகை அதிகமாகி மகிழ்ச்சி பொங்கும். கடந்த காலத்தில் பணக்கஷ்டத்தை அனுபவித்து வந்ததால் குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்தீர்கள். இப்போது பல வழிகளிலிருந்தும் வருமானம் வந்து செழிப்பாக இருப்பதால், குடும்பத்தினரின் தேவைகளை காலமறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது மிகவும் பிரியம் காட்டுவார்கள். இதனால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். உங்கள் முகத்தில் ஒரு பொலிவு இருக்கும். உங்கள் அந்தஸ்து செல்வாக்கு இவை உயரும். சகலவித சௌகரியங்களும் பெருகும். இதுவரை தொல்ல செய்துவந்த உடல் நோய்களும் நீங்கும். வேலை கிடைக்காமல் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ற நல்ல சன்பளத்தில் வேலை கிடக்கும்,. ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் தீர்ந்து ,சொத்து உங்கள் கைக்கு வரும். சாதுக்கள், ஞானிகள், குருமார்கள் இவர்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். புதல்வர்களின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை சிறப்படையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தந்தை மேன்மை அடைவார்.  உங்களுக்கு தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். இந்தக் காலத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ஆககூடிய வேலைகள் மளமளவென முடிவடயும். கடன் சுமை குறையும். நீங்கள் கொடுத்திருந்த கடன் வசூலாகும்.  திரும்ப கைக்கு வராது என்று இழுபறியாக இருந்த கடன்கள் இப்போது வசூலாகிவிடும். கடந்த காலத்தில் கோர்ட் ,கேஸ் என்று அலைந்து பல தொல்லைகளுக்கு ஆளானவர்கள் இப்போது அவற்றிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக வரும். சிலர் ஆடம்பப் பொருள்களை வாங்கி மகிழ்வர். விருந்து கேளிக்கை என்று உல்லாசம் பொங்கும் நேரம் இது. பிரபலமான பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். அனுகூலமான செய்திகள் வரும்.

தொழில் இல்லாதவர்களுக்கு ந்ல்ல தொழிலும், ஏற்கெனவே செய்துவரும் தொழிலில் நல்ல விருத்தியும் உண்டாகும். கூடுதல் வருமானத்துக்காக மற்றொரு தொழிலும் புதிதாக தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல தற்போது செய்துவரும் வியாபாரத்தோடு மேலும் ஓர் வியாபாரத்தையும் இணைத்துச் செய்வதற்கான வாய்ப்பும் அமையும். வெளிநாடு சென்று, தொழில், உத்தியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் நினைத்தது நடக்கும். சிலருக்கு ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் ஈடுபாடு உண்டாவதால், அத்தொழிலில் ஈடுபட்டு ஏற்றம் பெறுவர். வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீடுகட்டி குடியேறுவர். அதிக ரிப்பேர் செலவு கொடுத்துவந்த பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும்.  நீங்கள் எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும்.

இப்படியாக ராஜ கிரகங்களான சனியும், குருவும் காத்து அருள் புரியும்போது, நீங்கள் இந்தப் புத்தாண்டில் ஏற்றம் பெறலாம். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் புத்தாண்டு என்பதில் சந்தகமில்லை.

பரிகாரம்::

கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. அதனால் நீங்கள் ஒரு வினாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோவிலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரம் ஆண்டின் முன்பாதியில் சரில்லாமல் உள்ளதால் நீங்கள் வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று, கொண்டக்கடலை மாலையும மஞ்சள் மாலையும் சாத்தி வழிபடவும்.

புத்தாண்டு இனிதே சிறக்க வாழ்த்துக்கள் !