ரிஷப ராசி:

கிருத்திகை(2,3&4);ரோகினி; மிருகசிரீஷம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

இந்த 2012 -ம்ஆண்டு  தொடக்கத்தில், ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதியன்று வரப்போகும் குருப்பெயர்ச்சியின்போது குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.  மே மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதுபோலத்தான் இருக்கும். இனி ராகு- கேது சஞ்சாரங்களைப் பார்த்தோமானால், ராகு உங்கள் ராசிக்கு 7-மிடத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்ல சஞ்சாரமல்ல.  ஆனால், டிசம்பர் 2011-ல் வந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கும் முற்றிலும் ராசியான 6-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய சஞ்சாரமாகும். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

12-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களிடமுள்ள  ஊக்கத்தைக் குறைப்பார். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிட்டுவிடும். கொலாஸ்ட்ரால்  சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .

இனி குருவின் ஜென்ம சஞ்சாரமும் பெரிய வித்தியாசத்திக் காட்டப் போவதில்லை. நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கல் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கலள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.

ஜென்ம குருவும் பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய் வவிடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று படுத்தும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.

ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.

அதுபோலவே ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிப்ப்து நல்லதல்ல. ராகு உங்கள் 5-மிடத்தையும் 9-மிடத்தையும் பார்வையிடுகிறார். அதேசமயம், உங்கள் ஜென்ம ராசியில் அமைந்துள்ள கேதுபகவான், உங்கள் ராசிக்கு 3-மிடத்தையும் 11-மிடத்தையும் பார்க்கிறார். இதன்மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவும் அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும். சிலர் அவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடஙகுவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தையும் நட்பையும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல், இரணடையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இரண்டையுமே கெடுத்துக்கொள்வார்கள். சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும்.

சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.

கேதுபகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.

மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.

தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.

கேதுபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள்  ராசிக்கு மூன்றாமிடத்தைப் பார்ப்பதால், மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது. கேது 11-ம் பார்வயாக உங்கள் ராசிக்கு 11-மிடத்தைப் பார்ப்பதால், உங்கள் வருமானம் குறையலாம். தேவையில்லாத பழக்கவழக்கங்கள் ஏற்படலாம்.

இனி இத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக, சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சாரம் செய்வது மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும். இவர் துலா ராசியில் இருந்துகொண்டு உங்கள்  ராசிக்கு 3,8 12-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். சகோதரி ஸ்தானம் பலப்பட்டு, சகோதர சகோதரிகளின் உறவு வலுப்படும். வழக்கில் வெற்றிகளும் நிர்ணயமாகும் நேரம். வேண்டிய அளவு சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். மூன்றாமிடத்தை சனி பார்ப்பதால், உடன்பிறப்புகளின் முன்னேற்றம்கருதி பெரும் தொகையை நீங்கள் செலவிடலாம்.நீங்கள் தொழில் தொடங்குவதற்கு உடன்பிறப்புகள் கை கொடுத்து உதவுவார்கள். எட்டாமிடத்தை சனி பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். பாயில் படுத்திருந்தவர்கள் பம்பரமாக சுழல்வார்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் வழியை சனி காட்டுவார். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சியில் இருந்துவந்த தடை நீஙகும். உற்றார் உறவினரின் ஆதரவு மன நிறைவைத் தரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புத்திர வழியில் ஏற்பட்ட சஞ்சலங்கள் விலகிவிடும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால், அபிவிருத்தி பெருகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலனையே காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மன நிம்மதியையும் நிறைவையும் அடைவார்கள். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும். ஆனால், ஊதிய உயர்வுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். போட்டி, பொறாமை யாவும் மறையும்.

இப்படியாக , குருவின் சஞ்சாரமும் , ராகு கேதுவின் சஞ்சாரமும் சரில்லையென்றாலும், சனியின் சாதகமான சஞ்சாரம் நற்பலன்களைக் கொடுக்கும். சனிக் கிரகமே சக்திமான் என்பதால், மற்ற கிரகங்களால் வரக்கூடிய கெடுபலன்களையும் குறைக்கவல்லது.  எனவே இந்தப்  புத்தாண்டு உங்களுக்கு சனிபகவான் அருளும் , சிறப்பு வரமாக அமையும்.

பரிகாரம்: உங்களுடைய ராசிக்கு ராகுவின் ஏழாமிடத்து சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். கேதுவின் ஜென்ம ராசி சஞ்சாரமும் சரில்லை என்பதால், வினாயகர் கோவிலுக்கு சென்று, கோவிலை சுத்தப்படுத்தி கோவிலுக்கு சேவை செய்யவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் வஸ்திரம் அணிவித்து கொண்டக் கடலை- மாலை போட்டு வணங்கவும்.

சனிபகவானின் யோக சஞ்சாரத்தால், இந்தப் புத்தாண்டு நலம் தரும் நல்லாண்டாக சிறக்கும். வாழ்க பல்லாண்டு.  இது நலமளிக்கும் புத்தாண்டு!