விருச்சிக ராசி

 

இந்த  2012-ம் ஆண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்ததாக இருக்கும். ஆனால், அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில் குருவின் சஞ்சாரமும் பார்வையும் அமைந்து விட்டதால், நீங்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியடையவே வாய்ப்புண்டு. ஆண்டு தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அதாவது விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தும் நல்லதல்ல. ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், ஏன் அலைகிறோம் என்பதே தெரியாமல் அலைந்துகொண்டிருப்பீர்கள். அலைச்சலால் உங்கல் உடல்நலம் பாதிக்கப்படும். அடிக்கடி பயணம் செய்ய நேரும் . ஆனால், அதனால் உங்களுக்கு எந்தவித பயனும் ஏற்படாது. இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் அறிவுத் திறமை எந்த விதத்திலும் படயன்படாது. நீங்கள் எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள். தொழில் மந்தமாகும். வருமானம் குறையும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும்.  செலவுகள் எதையும் குறைக்க முடியாது.  வேற்று மதத்தினருடன் கூட்டுத் தொழில் தொடங்க நேரும். அப்படி நேருமானால் புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுதல் நலம்.  ஏனெனில் சிக்கலில் மாட்டிவிட்டு விடுவார்கள். புதிய தொழில் தொடங்கினால், தொல்லைதான். தொடங்கியதை நடத்தவும் முடியாமல், இருப்பதை தொடரவும் முடியாமல், கஷ்டப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள். தொழில் ஸ்தாபனங்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். மேலதிகாரிகள்  வேலையில் குறைகாண்பார்கள்.  கூட வேலை செய்பவர்க்ள ஒத்துழைக்க மாட்டார்கள். வேலையில் நொந்து போய் ஏதாவது பேசினீர்கள் என்றால், வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள். நேரான வழியில் நடந்தால் தோல்வியே வருகிறதே என்று நொந்து போய் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள். அதன்மூலமும் கஷ்டப்படுவீர்கள். ஒருமுறை மாட்டிக்கொண்டுவிட்டு அதிலிருந்து தப்பிக்க , மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்வீர்கள். எதிரிகளின் பலம் ஓங்குவதால், அவர்களிடம் அவமானப்படநேரும். உடல்நலத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு,. விஷக்கடி ஏற்படலாம். சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். தாயாரின் உடல் நலம் கெடும். உங்கள் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும்.

இனி கேதுவின் 7-ம் இடத்து சஞ்சாரமும் கிட்டத்தட்ட மேற்கூறப்பட்டதுபோன்ற கெடுபலன்களையே கொடுப்பார். கூட்டாளியை அனுசரித்துப்போகாவிட்டால் கூட்டாளிகளால், பெரும் ஆபத்து வர வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். பலவிதமான குழப்பங்கள் மனதில் நிலவும். சிலர் சட்ட விரோதமான, நூதனமான தொழிலை மேற்கொண்டு, மோசம்போவது மட்டுமின்றி அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மற்றவர்களின் சந்தேகத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாவீர்கள். திடீர் கண்டங்கள், ஆயுள் பாதிப்புகள் ஏற்படும்.   குடும்பத்தினர், உறவினர்களின்  விமர்சனத்துக்கும்  ஆளாவார்கள். இரட்டைக் கணக்கு வைத்துள்ள வியாபாரிகள் இப்போது மாட்ட்டிக்கொள்ள நேரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

இனி சனியின் விரய ஸ்தான சஞ்சாரம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம். சிலருக்கு கண்டம், பொருள் இழப்பு திருடர்களால்,  போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் குறையும். பயணங்களின் போது குடிக்கும் தண்ணீரையும், சாப்பிடும் உணவுப்பொருளையும் சுத்தமாக இருக்கிறதா என்று சோதித்த பின் சாப்பிடவும். குளிர் சம்பந்தப்பட்ட நோய்களான சளி, மூச்சிறைப்பு, இருமல் போன்றவை உண்டாகும். சிலருக்கு பணக்கஷ்டத்தால் செய்யும் தொழிலில் மூலதனம் குறைவதால், தொழிலை வெளிநாடு, அல்லது வெளியூருக்கு மாற்றவேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள் கூட இருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க தானே சென்று இடமாற்ற கேட்டு ம் வாங்கிச் செல்வார்கள். வெப்ப நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.  சனியின் சஞ்சாரத்தால் அதிக பாதிப்பு ஏற்பட வழியில்லை. ஏனன்றால் சிந்திக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் நினைப்ப்துதான் சரி மற்றவர்கள் சொல்வது தவறு என்ற போக்கை மாற்றிக்கொண்டால் கொஞ்சம் நற்பலன்களாக நடக்க வழியுண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு முதலியவை கிடைக்கும். மேலும், மே 16-ம் தேதிவரை சனிபகவான் சஞ்சரிக்கும் துலா ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் பாதக பலன் ஏற்பட வாய்ப்பில்லை. மே மாதம் 17-ம் தேதி முதல், குரு 7-ம் இடத்துக்கு வந்து விடுவதால், இந்த ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும்.

இனி குருவின் சஞ்சாரத்தைப் பார்க்க்லாம். மே மாதம் 17-ம் தேதிவரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திலும் மே மாதம் 17-க்குப் பிறகு 7-ம் இடத்துக்கு வருகிறார். குரு 6-ம் இடத்தில் இருக்கும்போது மனதில் எப்போதும் ஒரு சோகம் இருக்கும். குடும்பத்தினரின் பேச்சும் செயலும், உங்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமும் இருக்கும். கடுகடுப்பாக இருப்பீர்கள். எதிரிகளைப் பற்றிய பயம் இருக்கும். தொழில் மந்தமாக இருப்பதால், வருமானம் இருக்காது. கோபமாகப் பேசுவதால் நண்பர்களை இழப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு  மாட்டிக்கொள்வீர்கள். அவர்கள் வாங்கிய கடனை நீங்கள் அடைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் எதற்கும் வாக்களிக்க நேர்வதால் சிரமப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். கர்ப்பிணிப்பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படும். எல்லாவற்றிலும் தடையும் தடங்கல்களுமாக இருக்கும்.

இந்த நிலை வருகிற மே மாதம் 17-ம் தேதி முதல் மாறி நற்பலங்களாக நிகழும். வியாபாரம் மேன்மையடைந்து, வருமானம் பெருகும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். அலைச்சல்கள் குறையும். நல்ல ஓய்வு, நல்ல உணவு, நல்ல உடை என்று சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனங்க்ள் வாங்குவீர்கள். அந்நியப் பெண்களால் தொல்லை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடகில் உள்ள நகைகளை மீட்பீர்கள். திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் கூடிவரும் . சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, மேற்படிப்பு, வாலைவாய்ப்பு என்று அனைத்திலும் நல்ல வாய்ப்பை அடைவார்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நடந்தேறும். பெரியோர்கள், ஞானிகள் மற்றும் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிட்டும். இதுவரை குடத்திலிட்ட விளக்காக இருந்த நீங்கள் இப்போது வெளி உலகுக்கு தெரிய ஆரம்பிப்பீர்கள். எதிரிகள் உங்களிடம் பலமிழப்பார்கள். தந்தை மேன்மை அடைவார். சிலருக்கு தவறிப்போன பிதுர்காரியங்களை செய்ய வாய்ப்புகிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

எனவே இந்த ஆண்டு உங்களுக்கு பொதுவாக  நல்ல பலன்களே,  ஏற்படும். ராகு, கேது, சனி இவற்றின் சஞ்சாரம்  சரியில்லாவிட்டாலும்கூட குரு-பார்வை பலனும், குருவின் 7-ம் இடத்து சஞ்சாரமும் நிலைமையை சீராக்கி யோகமான பலன்களாகக் கொடுக்கும்.

பரிகாரம்:

சனியின் விரய ஸ்தான சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகலில் சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று எள்தீபம் ஏற்றுங்கள். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’ பாராயணம் செய்யவும். வயோதிகர்களுக்கும் ,உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு பொருள்களை தானம் செய்யவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபட்டு, கறுப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மி தேவியை வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லை. எனவே வினாயகர் கோவிலுக்குச் சென்று, சுத்தம் செய்வது போன்ற சேவைகளைச் செய்யவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரம் மே மாதம் 16-ம் தேதிவரை சரியில்லாததால், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மற்றும் மஞ்சள் நிற மாலைசாற்றி வழிபடவும்.

இந்த ஆண்டு உங்களுக்கு மிக நல்ல ஆண்டாகவே இருக்கும். வாழ்க வளமுடன்.!