நவம்பர் 2011


சிம்மம் ராசி

இந்த வருடம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அதுமட்டுமின்றி, குருபகவண் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதும் யோகமே. குருவின் இந்த 9-ம் இடத்து சஞ்சாரம் மே மாதம் 16-ம் தேதியோடு முடிவடைந்து, அதன்பிறகு 10- இடத்துக்குப் போகும் குரு பலன்களை மாற்றித் தருவார். இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

முதலில் ராகு-கேது சஞ்சாரங்களைப் பார்ப்போம்.

ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல.

4-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகு, உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்ட நஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.

குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடுயாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படலாம். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் வீட்டுக்குள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அதற்கு செலவழிக்க பணமில்லாமல்திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்கு குறைந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.

ராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இருக்குமானால்,அவை நீங்கி, அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும்.

இனி கேது பகவான், உங்கள் ராசிக்கு 10 இடத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்பப்  பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும்கணடங்களைத் தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கண்ட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம். ஜனன ஜாதகத்தில்  10-ம் இடத்தில் மாந்தி இருந்தால்,  மற்றவர் பொருளை அபகரிக்கும் சாதகம் வரும். ஆனால், இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.

சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகமானது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்திற்கு சனி வருவதால், இந்த சனியை குருபகவான் பார்வையிடுவதும் ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந் தபகை ,விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை என்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகளிலிருந்தும் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை  அனைத்துமே நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் பரடுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு வீட்டில்சொல்லப் பயந்து  விழித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

இனி குருப் பெயற்சி பலன்களைப் பார்த்தோமானால், குரு உங்களுக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் வரை உங்களுக்கு யோகமான பலன்களே நடக்கும். மே மாதம் 16-ம் தேதிவரை இந்த சஞ்சாரம் தொடரும். அதுவரை பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று நல்லுறவு மலரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைபட்ட திருமணங்கள் நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

மே மாதம் 17-ம் தேதி முதல், குரு உங்கள் ராசிக்கு 10-ம் இட்த்தில் சஞ்சரிக்கிறார். குரு 10-ம் இடத்துக்கு வரும்போது பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம்.  தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த வேண்டும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்கலளுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில்லா இடமாற்றங்கள்வரும். கணவன்-மனைவியிடையேயும், மூத்தசகோதரருடனும் பிரச்சினை தோன்றும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும்.  இப்படியாக சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும்.

மொத்தத்தில், ராகு முதலிய கிரக சஞ்சாரங்கள் சரியில்லை என்றாலும், சனிபகவானும் ஆண்டு முன்பாதிவரை குருவும் சரி பண்ணிவிடுவார்கள். ராஜ கிரகங்கள் துணை நிற்பதால், ஆண்டு முழுவதும் நற்பலன்களாக நடைபெறும்.

பரிகாரம்:

உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபடுங்கள். கருப்பு உளுந்து தானம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்கு செல்லவும். கேது சஞ்சாரம் சரியில்லை என்பதால், கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.  குரு பகவான் ஆண்டு பிற்பகுதியில், சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.

இந்த 2012-ம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டுதான். வாழ்க வளமுடன் !

கடகம் ராசி

இந்தப் புத்தாண்டில்,  ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில்  இந்த ஆண்டு மேம மாதம் 16-ம் தேதிவரை சஞ்சரிக்கிறார்.  அதன்பின் அதாவது, மே மாதம் 17-ம் முதல், குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்குப் போகிறார்.  சனி பகவான் சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி உச்ச சனியாக சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 1 , 6 மற்றும் 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதன் விளைவாக உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது  வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு  விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம்.. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். எட்டுக்கு அதிபதியான சனி ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு இப்போது வந்து சேரும். கடன் பாக்கிகள் வசூலாகும். பகையான நட்பு உறவாகும். பத்தாம் இடத்தை சனி பார்ப்பதால், உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

இனி ராகு கேது சஞ்சாரங்களைப் பார்க்குமிடத்து ராகு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், தனது ராசிக்கு 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்க்கிறார். தனது 11-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடமான விருச்சிகத்தில் உலாவரும் ராகு பகவான் பலவகையான கற்பனைகளை உங்கள்  மனதில் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். அதை சாதிக்க வேண்டும், இதை சாதிக்க வேண்டும் என்று செயல்பாட்டுக்கு வரமுடியாத , செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஜனன காலத்தில் 5-ம் இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருக்குமானால், தற்சமயம் அவர்களுக்கு , புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வண்டி வாகனம் வாங்கி பவனிவர வாய்ப்புண்டு. சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். சிலர் புதிய வீடு, மனை, நிலம்  ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும். திருமணம் ஆகாத வாலிப  வயதினராக இருந்தால், இந்த சமயத்த்ல் காதல் வயப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த காதல் ஜோடி வேற்று மதத்தினராகவோ, அல்லது வேற்று இனத்தவராகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தக் காலத்தில் திருமணமாகி ,புத்திரப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.ஆனால், 5-ம் இடத்தில் செவ்வாயோ ,சூரியனோ அமர்ந்து இருந்தால்,உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் சுய வீடாக இருந்தால், சிறு உயர்வைக் காட்டி, பின்பு மோசமான பலன்களாக கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். தொழில் ரீதியாக எதிர்பாராத முன்னேற்றத்தைக் கொடுப்பார். ஆனால், 5-ம் இடத்தில் சூரியன் இருப்பாரேயானால், கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராகு பகவானுக்கு உங்கள் 5-ம் வீடான விருச்சிகம் உச்சவீடு என்பதால், ராகுவுக்கு உரிய கோச்சார பலன்களைக் கொடுக்காமல், சிறப்பான பலன்களைக் கொடுப்பார். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளச் செய்வார். குடும்பத்தாரின் தேவைகளை காலம் அறிந்து பூர்த்தி செய்து வைப்பீர்கள். அதன்பலனாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதுடன், குடும்பத்தினரின் அன்புக்கும் ஆதரவிற்கும் பாத்திரம் ஆவீர்கள். புதிய நண்பர்ள், புதிய உறவுகள் என்று உங்கள் பழக்கங்கள் விரிவடையும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளை உரிய பெரிய மனிதரை அணுக்கி தீர்த்துக்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை ராகு பார்ப்பதால், உங்கள் மனோபலம் மேன்மையடையும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு அல்லது சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.

மொத்தத்தில் 5-ம் இட்த்தில் ராகு சஞ்சரிக்கும்போது திடீர் வருமணம் கிடைக்கும். நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். வீணான மனக் கசப்பும் அலைச்சலும் ஏற்படுவதற்கன வாய்ப்புகள் உண்டு. கோர்ட், கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலைச்சல் மனக்கவலை ஏற்படும்.  உறங்கக்கூட நேரமில்லாமல் போகலாம். கணவன்- மனைவி  உறவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

இனி கேதுபகவானின் சஞ்சாரம் எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.  இதுவும் உங்களுக்கு நற்பலன்ளாகவே இருக்கும். எதிர்பாராதவிதமாக தன லாபம் கிடைக்கும். சிலர் புதிய நூதனமான தொழில் ,வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். புதிய நண்பர்கள்  நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு நல்ல விஷயங்களாகவே இருக்கும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களின் ஆசியும் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டு. மூத்த சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நல்ல பெயரும், சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்பட வும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அரசியல்வாதிகள், அரசுத் துறையில் உள்ளவர்கள், கௌரவமிக்க பெரியவர்களின் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. இந்த காலகட்டம் தாய்க்கோ அல்லது தாய்வழி உறவினருக்கோ அல்லது தகப்பனாருடைய தாய்க்கோ உகந்த காலம் அல்ல. அவர்களுக்கு தீய பலன் ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் கேஸ்களுக்கு உங்கள் பக்கம் தீர்ப்பு வந்து சுமுகமாக முடியும்.

ஜனன காலத்தில் ரிஷபத்தில் மாந்தி இருப்பவரக்ளுக்கு பலவழிகளிலிருந்தும் திடீர் திடீரென வருமானம் வந்துகொண்டிருக்கும். குரு ஜனன காலத்தில் ரிஷபத்தில் இருப்பாரானால்,  புத்திரர்களால் கவலை, புத்திரர்கள் முன்னேற்றத்தில் தடை . பூர்வீக சொத்தில் விவகாரங்கள் போன்றவை ஏற்படும்.  அதுபோல சுக்கிரன் இருந்தால், தாயார் மேன்மை அடைவார். ஆடை- ஆபரணச் சேர்க்கை, வீடு, மனை ,சொகுசு வாகனங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். செவ்வாய் இருக்குமானால், அரசு-கௌரவம், கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் அரசு உத்தியோகம் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த கால கடட்த்தில், ஆன்மீக நாட்டமும், தெய்வபக்தியும் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். தீய நண்பர்கள் யாராவது தற்சமயம் உங்களுடன் இருந்தால் , அவர்கள் உங்களை விட்டுப் போய்விடுவார்கள். உங்களுடைய பகைவர்கள் கூட உங்களிடம் ஒட்டி உறவாடி உங்களிடம் ஆதாயம் தேட முனைவார்கள். சிலருக்கு அரசியல் ஈடுபாடு அதிகமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். சிலர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வர். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்க வழியுண்டு. இந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் உண்டு. கேதுவின் பார்வை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் பதிவதால், தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

இனி குருவின் சஞ்சார பலன்களைப் பாக்கும்பொழுது, குரு இந்த வருடம் மேமாதம் 16-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் அதன்பிறகு  அதாவது மே மாதம் 17-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளார்.  குரு 10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு  கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை  கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக,  வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பொருளாதாரம் சிறக்கும். சேமிப்பு மிகுதியாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ஏற்கெனவே கூறியபடி, மே மாதம் 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் அமரப் போகும் குரு, உங்களுக்கு நற்பலன்களாகவே வாரி வழங்குவார். . உங்கள் காட்டில் அடைமழைதான்!. இதுவரை முடிக்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் முடித்து வைப்பார். உங்கள் எண்ணங்கள் ,கனவுகள் அத்தனைக்கும் செயல்வடிவம் கொடுத்து வாழ்க்கையில் உன்ன்னத நிலையை அடைவீர்கள். மண்ணைத் தொட்டாலும் இனிமேல் பொன்னாகும் நேரம் வந்துவிட்டது. புதிய தொழில் தொடங்குவதற்கு இதுநாள்வரை இருந்துவந்த தடை நீங்கிவிட்டது. தொழிலில் அபரிமிதமான லாபம் காண்பீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் , இதுவரை உள்மாநிலத்தில் மட்டும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு இனி வெளி மாநிலத்திலும் தொழிலை விரிவுபடுத்துவர். சிலருக்கு இதுவரை கூட்டுத் தொழில் நடத்தி வந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தானே முழுப் பொறுப்பையும் ஏற்று கம்பெனியை நடத்திச் செல்லும் யோகத்தையும் பெறுவீர்கள். அன்னிய பாஷை பேசுபவர்களுடன் வியாபாரத் தொடர்பும், நட்பும் ஏற்படும். இதுவரை இளைய சகோதரர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் படிப்பிலும் ,பிற துறைகளிலும் சிறந்து விளங்கி நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். விட்டுப் பிரிந்த நண்பர்கள்மீண்டும் உதவி செய்ய முன் வருவார்கள். மனைவியின் ஆலோசனைகளும் உதவியாக இருக்கும். தந்தையுடன் இருந்த பிரச்சினைகள் அகன்று அவரின் ஒத்துழைப்பும் மூத்த சகோதரரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு விருப்பமான பணி உயர்வும் விரும்பிய இயடமாற்றமும் கிடைக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வீடுதேடிவந்து கதவைத்தட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்து உங்கள் கைக்கு வரும். அல்லது அந்த சொத்தின்மூலம் ஒரு பெரும் தொகை உங்கள் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றி காண்பீர்கள்.

இப்படியாக  மே மாத பாதிவரை குரு பாதகமாக இருந்தாலும், பிற்பாதியில் சுபிட்சம் பெருகும். ராகுவும், கேதுவும் கூட சாதகமாக இருப்பதாலும், சனி, உங்களுக்கு நாலாம் இடத்தில் சஞ்சரித்தாலும் உச்சவீட்டில் அமர்ந்துள்ளதால், உங்களுக்கு எந்த கெடுதியும் உண்டாக வாய்ப்பில்லை.  நற்பலன்களே மிகுந்து காணப்படும். எனவே இந்த புத்தாண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாகவே இருக்கும்.

பரிகாரம்:

சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து  மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும். சனி  நாலாம் இடத்தில் சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் சந்நிதிக்கு சென்று, எள் தீபம் ஏற்றி, வழிபடவும். காக்கைக்கு தினந்தோறும் அன்னமிடவும். வயதானவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யவும். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’வை தினந்தோறும் பாராயணம் செய்யவும்.

யோகங்கள் பலவும் பெற்று, இந்தப் புத்தாண்டில் பல்லாண்டு வாழ்க!.

மிதுன ராசி

இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.  இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம்  மே மாதம் 17-ம் தேதிவரை நீடிக்கும்.

குருபகவானைத் தவிர, ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 12-மிடத்திலும் ஆண்டு இறுதிவரை சஞ்சரிக்கிறார்கள். இந்த சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு நல்லது செய்யும் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் சாதகமான காலக்கட்டமே. எனவே இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சி நிறையப் போகிறது.

ஆண்டு தொடக்கத்தில், குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

குருபகவானின் சுபத் தன்மை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

ராகு-கேது ஆகிய இரு சர்ப்பக் கிரகங்களும்  உங்களுக்கு நன்மை தரப் போவதால், இந்த ஆண்டு உங்களுக்கு லாபமாகவே இருக்கும். குருபகவான் அளித்த நற்பலன்களைப் போலவே, வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்களை ராகுவும் வாரிவழங்கத் தயங்கமாட்டார். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அஜீரணக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள் வயிற்று சம்பந்தமான கோளாறுகள் ஆகியவை ஏற்படும். நெருங்கிய உறவினர் சிலர் எதிர்ப்பு காட்டக்கூடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயர்ச்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.

கேதுபகவானின் சஞ்சாரமும்  யோகமாகவே உள்ளது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயர்ச்சியில் ஈடுபடுவார்கள்.

அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது,  நீங்கள் அர்த்தாஷ்டம சனியின் பிடியிலிருந்து விடுபட்டதே பெரிய விஷயம். இனி சனியின் ஐந்தாமிடப் பிரவேசம் உங்களுக்கு நன்மையே செய்யும்.  துலாம் ராசியில் இருந்தபடி உச்சம் பெற்ற சனி உங்கள்  ராசிக்கு 2,7,11-ம் இடங்களைப் பார்க்கப் போகிறார். இதன் விளைவாக பண வசதிக்கு குறைவில்லை. குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்து வேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் . உங்கள் ராசிக்கு எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதியபதியான சனி பகவான் 5-ல் உச்சம் பெறுகிறார். பணப் புழக்கம் அதிகரிக்கவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலவும் சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். சனியின் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்களுக்கு வள்ளலாக வாரி வழங்குவார். உங்களுடைய சப்தம ஸ்தானத்தையும் சனி பார்ப்பதால், வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக இந்த ஆண்டு முழுவதும் ராகு,கேது,சனி ஆகிய மூன்று கிரகங்களும் நற்பலன்களை வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குருபகவானின் சஞ்சாரம்  மே மாதம் 17-ம் தேதிவரைதான் சிறப்பாக இருக்கும். அதன்பிறகு குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும்.

இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும் . குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல்முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் கொடுத்து நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும்.  பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும் கிளம்பி வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய பணம்   சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி, உங்கள் மதிப்பு குறையும் அளவுக்குப் போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும்.

கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும்.

கொஞ்சம் ஆறுதல் தரும் விதமாக,  12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுவதால்,ஒளி வீசுகிறது. இதனால் க்ல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் உயரும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை சந்தித்து வெற்றிகொள்ள முடியும். எனவே மொத்தத்தில் பெரும் கிரகங்கள் உங்களுகுத் துணை நிற்பதால், உங்களுக்கு இந்தப் புத்தாண்டு சுபமாகவே அமையும்.

பரிகாரம்:

மே மாதம் 17-ம் தேதிக்குப் பிறகு குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். வினாயகரை வழிபடவும்.

வளம் சேர்க்கும் இனிய புதாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

ரிஷப ராசி:

கிருத்திகை(2,3&4);ரோகினி; மிருகசிரீஷம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

இந்த 2012 -ம்ஆண்டு  தொடக்கத்தில், ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதியன்று வரப்போகும் குருப்பெயர்ச்சியின்போது குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.  மே மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதுபோலத்தான் இருக்கும். இனி ராகு- கேது சஞ்சாரங்களைப் பார்த்தோமானால், ராகு உங்கள் ராசிக்கு 7-மிடத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்ல சஞ்சாரமல்ல.  ஆனால், டிசம்பர் 2011-ல் வந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கும் முற்றிலும் ராசியான 6-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய சஞ்சாரமாகும். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

12-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களிடமுள்ள  ஊக்கத்தைக் குறைப்பார். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிட்டுவிடும். கொலாஸ்ட்ரால்  சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .

இனி குருவின் ஜென்ம சஞ்சாரமும் பெரிய வித்தியாசத்திக் காட்டப் போவதில்லை. நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கல் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கலள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.

ஜென்ம குருவும் பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய் வவிடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று படுத்தும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.

ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.

அதுபோலவே ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிப்ப்து நல்லதல்ல. ராகு உங்கள் 5-மிடத்தையும் 9-மிடத்தையும் பார்வையிடுகிறார். அதேசமயம், உங்கள் ஜென்ம ராசியில் அமைந்துள்ள கேதுபகவான், உங்கள் ராசிக்கு 3-மிடத்தையும் 11-மிடத்தையும் பார்க்கிறார். இதன்மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவும் அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும். சிலர் அவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடஙகுவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தையும் நட்பையும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல், இரணடையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இரண்டையுமே கெடுத்துக்கொள்வார்கள். சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும்.

சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.

கேதுபகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.

மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.

தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.

கேதுபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள்  ராசிக்கு மூன்றாமிடத்தைப் பார்ப்பதால், மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது. கேது 11-ம் பார்வயாக உங்கள் ராசிக்கு 11-மிடத்தைப் பார்ப்பதால், உங்கள் வருமானம் குறையலாம். தேவையில்லாத பழக்கவழக்கங்கள் ஏற்படலாம்.

இனி இத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக, சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சாரம் செய்வது மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும். இவர் துலா ராசியில் இருந்துகொண்டு உங்கள்  ராசிக்கு 3,8 12-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். சகோதரி ஸ்தானம் பலப்பட்டு, சகோதர சகோதரிகளின் உறவு வலுப்படும். வழக்கில் வெற்றிகளும் நிர்ணயமாகும் நேரம். வேண்டிய அளவு சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். மூன்றாமிடத்தை சனி பார்ப்பதால், உடன்பிறப்புகளின் முன்னேற்றம்கருதி பெரும் தொகையை நீங்கள் செலவிடலாம்.நீங்கள் தொழில் தொடங்குவதற்கு உடன்பிறப்புகள் கை கொடுத்து உதவுவார்கள். எட்டாமிடத்தை சனி பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். பாயில் படுத்திருந்தவர்கள் பம்பரமாக சுழல்வார்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் வழியை சனி காட்டுவார். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சியில் இருந்துவந்த தடை நீஙகும். உற்றார் உறவினரின் ஆதரவு மன நிறைவைத் தரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புத்திர வழியில் ஏற்பட்ட சஞ்சலங்கள் விலகிவிடும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால், அபிவிருத்தி பெருகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலனையே காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மன நிம்மதியையும் நிறைவையும் அடைவார்கள். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும். ஆனால், ஊதிய உயர்வுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். போட்டி, பொறாமை யாவும் மறையும்.

இப்படியாக , குருவின் சஞ்சாரமும் , ராகு கேதுவின் சஞ்சாரமும் சரில்லையென்றாலும், சனியின் சாதகமான சஞ்சாரம் நற்பலன்களைக் கொடுக்கும். சனிக் கிரகமே சக்திமான் என்பதால், மற்ற கிரகங்களால் வரக்கூடிய கெடுபலன்களையும் குறைக்கவல்லது.  எனவே இந்தப்  புத்தாண்டு உங்களுக்கு சனிபகவான் அருளும் , சிறப்பு வரமாக அமையும்.

பரிகாரம்: உங்களுடைய ராசிக்கு ராகுவின் ஏழாமிடத்து சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். கேதுவின் ஜென்ம ராசி சஞ்சாரமும் சரில்லை என்பதால், வினாயகர் கோவிலுக்கு சென்று, கோவிலை சுத்தப்படுத்தி கோவிலுக்கு சேவை செய்யவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் வஸ்திரம் அணிவித்து கொண்டக் கடலை- மாலை போட்டு வணங்கவும்.

சனிபகவானின் யோக சஞ்சாரத்தால், இந்தப் புத்தாண்டு நலம் தரும் நல்லாண்டாக சிறக்கும். வாழ்க பல்லாண்டு.  இது நலமளிக்கும் புத்தாண்டு!

மேஷம்:

அஸ்வினி; பரணி; கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

இந்த 2012-ம் ஆண்டு உங்களுக்கு ‘அ ப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்.  நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன் விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்ன?குரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2012- மே மாதம் 17-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால்  வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 17-ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம சனியின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல், சனியின் ஏழாமிடத்து சஞ்சாரமும் அனுகூலமானதல்ல். இது மட்டுமின்றி, எட்டாம் இட ராகுவும், இரன்டாமிட கேதுவும் நன்மை தராது. ராகு கேது சஞ்சாரமும், சனியின் சஞ்சாரமும், ஆண்டு முழுவதும் மாறாமல் இருக்கும். ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியை குருபார்ப்பதால், பெரிய பாதிப்புகளில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும், சனியின் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால், உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சனியின் பார்வை நான்காமிடத்தைப் பார்ப்பதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சனியின் பார்வை ஒன்பதாமிடத்தில் பதிவதால், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.

இது தவிர எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, எதிர்பாராத நிகழ்வுகளை நடத்திக் காட்டும். எதிர்பாராத என்றால் தீய பலன்கள் மட்டுமல்ல. எதிர்பாராத சில நல்ல பலன்கள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. ராகு பகவான் தனது மூன்றாம் பார்வையால் 10-ம் இடத்தைப் பார்ப்பதால்,உத்தியோக சம்பந்தமாகவோ தொழில் சம்பந்தமாகவோ, வெளியூர் செல்ல நேரும். சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகள்ஏற்படும். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்துபோக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குககளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும். அரசு ஊழியர்களும் உத்தியோகத்தில் இருப்பவர்களும் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.

இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பொருளாதார ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்கூட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கம்  ஏற்படும்.

இதுவும் தவிர, உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவனம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்து கொள்ளும்.

ஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். ஆனால், குருபகவான், மேஷராசிக்கு பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி என்பதால், ஜென்ம குருவின்பொதுவான கெடுபலன்களை  குறைத்துவிடும் என்பதாலும் ஆரோக்கியம் அவ்வளவாக பாதிக்காது. சின்னச் சின்ன அசௌகரியங்கள் வந்து அவ்வப்போது குணமாகிவிடும்.

பொருளாதார நிலைப் பார்க்கும்போது விரயஸ்தானத்த்ல் குரு வாசம் செய்தபோது கையில் காசு தங்காமல் ஓடியது, இல்லையா?  இபோதும் அதில் பெரிய மாற்றம் இருக்காது. வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும்.  எனவே கடன், கைமாற்று, இவற்றை  சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும்.

சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றும். மேலும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், தம்பதியரிடையே இணக்கத்தைக் குறைக்கும். பிள்ளைகளாலும் கவலை  ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும். ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 16 வரைதான்.

மே 17-2012-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். இதனால் குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கெண்ட சனியின் களத்திர ஸ்தான வாசமும் ராகு, கேதுவினால் நேர்ந்த இழப்புகளும் காணாமல் போய்விடும். ஏனென்றால் குரு என்னும் கிரகமே அனத்து கிரகங்களையும் கோலோச்சும் சக்தி பெற்றது. எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகுமளவுக்கு அடக்கி வாசிக்கப்படும்.

பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் அளவுக்கு யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும்,. தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன்  மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

இப்படியாக ஆண்டின் முற்பகுதி சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத நடுவில்  வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு இனிய குரு பெயர்ச்சியினால், இனிமை தரும் நல்லாண்டாகும்.

பரிகாரம்:

உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு நாள் ‘மிருத்யஞ்ஜ்ய ஹோமமு’ மோ அல்லது ‘ஆயுஷ் ஹோமமோ’ செய்யுங்கள்.’ ஆதித்ய ஹிருத்யம்’ தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். செவ்வாய்க் கிழமைககளில் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் செனறு, அவருக்கு செந்நிற மலர்களால் உங்கள் கைப்பட தொடுத்த மாலையை அணிவிக்கவும். துவரம்பருப்பை தானம் செய்யவும். ராகு எட்டில் இருப்பதால், துர்க்கயம்மனை வணங்கவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மிதேவியை வணங்கவும். சனி பகவானின் ஏழாமிடத்து சஞ்சாரம் நல்லதல்ல. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்ளு தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயோதிகர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ ஹனுமான் சலீஸா’ தினமும் படிக்கவும். மே மாத முற்பாதிவரை, ஜென்ம குருவின் சஞ்சாரம் நல்லதல்ல. எனவே, தட்சிணாமூர்த்தியை செவ்வரளி மாலையிட்டு, கொண்டக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கவும். உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.

வாழ்க பல்லாண்டு !சிறக்கட்டும் புத்தாண்டு !

நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.

 • 1872 – உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
 • 1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
 • 1936 – லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
 • 1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
 • 1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
 • 1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புக்கள்

 •  1858 – ஜகதிஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)
 • 1874 – வின்ஸ்டன் சேர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)
 • 1950 – வாணி ஜெயராம் – பிரபல இந்தியப்பாடகி.

இறப்புகள்

 •  1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)
 • சிறப்பு நாள்
 • பார்போடஸ் – விடுதலை நாள் (1966)
 •  புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
 • புனித அந்திரேயா தினம் – இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் உள்ளது.

நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

 • 1781 – கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
 • 1877 – தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
 • 1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார். 1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).

பிறப்புக்கள்

 • 1889 – எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)
 • 1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

இறப்புகள்

 • 1989 – மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
 • 1993 – ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)
 • 2008 – ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)

சிறப்பு நாள்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »