திசெம்பர் 2011


தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்:

* ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார்.

* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி! என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விஷ‌யமாகும்.

* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும்.

* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது.

Advertisements

இந்தப் புத்தாண்டு2012, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம்.

இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மற்றும்படி எனக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே குருபலன்களை மாத முற்பகுதியில் ஒருவிதமாகவும் மாத பிற்பகுதியில் வேறு விதமாகவும் இருக்கும்.

சனிபகவான் டிஸம்பர் 21-ம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயற்சியாகிறார். அதுபோல ராகு –கேதுக்களின் சஞ்சார விபரங்களும் தரப்பட்டிருக்கின்றன. இதன்பிரகாரம், ஒரு கிரகம் அனுகூல பலன்களைத் தந்தாலும், இன்னொரு கிரகம் அனுகூலமற்று காணப்படுவது இயற்கையே. .

பொதுவாக குரு மற்ற கிரகங்களை எப்போதுமே முன்னடத்திச் செல்லும் ஒரு கிரகமாகும். குரு உங்களுக்கு சாதகமாக இருக்கும்போது மற்ற கிரகங்கள் அனுகூலமற்ற நிலையில் இருந்தாலும், கெடுபலன்கள் உங்களை அணுகாது. ஏனென்றால் குரு அரணாக நின்ற உங்களைக் காப்பாற்றிவிடும். ஆனால், குருவின் சாதகமற்ற நிலையில்தான், மற்ற கிரகங்களின் பலன்கள் உங்களைப் பாதிக்கும். எனவே குருவின் சஞ்சாரத்தை வைத்து கிட்டத்தட்ட நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். மேலும், இரண்டரை வருடம் சனியின் பாதிப்புக்கு ஆளாக வேண்டுமே என்ற அச்சம் தேவையில்லை. இடையிடையே ஒரு வருடம் குரு வந்துபோவது ஒரு ஆறுதலாக அமையும். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சனி உச்சம் பெற்று துலாத்தில் சஞ்சரிப்பதால், இந்த சஞ்சாரம் துலா ராசிக்காரர்களுக்கு மட்டுமின்றி மரற்றவர்களுக்கும்கூட அதிகமான பாதிப்புகளைக் கொடுக்காது.

மேலும், சனி வருகிற 26.3.2012 முதல் 10.9.2012 வரை வக்கிரம் பெற்று துலாத்திலிருந்து கன்னி ராசிக்குப் போகிறார். இந்த வக்கிர காலத்தில் எல்லா ராசிக்காரர்களுக்கும், முன்பு கன்னி ராசியில் சனி இருந்தபோது என்ன பலன்களை தந்தாரோ அந்த பலன்களே இப்போது நிகழும்.

கிரகங்கள் தங்கள் பாதையில் சுழல்கின்றன. நமக்கு கெடுதல் செய்யவேண்டும் என்பது அவைகளின் நோக்கமல்ல. நாம் சரியான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்துவந்தால், எந்த கெடுபலனும் நம்மை அண்டாது. தினந்தோறும், கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களைச் சொல்லி வந்தால், எல்லா கஷ்டங்களும் பறந்தோடும். :

அனைத்து கிரக பீடைகளையும் நீக்க குரு மந்திரம்:

ப்ரகஸ்பதே அதிய தர்மோஅர்ஹாத்யும் த்விடாதிக்ரது

மஞ்சனேஷு யர்தீதய ச்சவஸர்த ப்ரஜாத்

ததஸ்மாஸு த்ரவிணம் தேஹிசித்ரம் ஸ்வாஹா.

சனி பகவான் மந்திரம்:

சாயாத் மஜாய வித்மஹே நீல வர்ணாய தீமஹி

தன்னோ ஸௌரி ப்ரஜோதயத்.

ராகு காயத்ரி:

நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராஹூ: ப்ரசோதயாத்

கேது காயத்ரி:

அஸ்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ: கேது:ப்ரசோதயாத்

மேலே கூறப்பட்ட மந்திரங்களை உங்கள் தினப்படி அலுவல்களுக்கிடையே நேரத்தை ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினப்படி பாராயணம் செய்து வந்தால் கஷ்டங்கள் விலகி நிம்மதி கிடைக்கும்.

ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்கள் பொதுவாகக் கூறப்படிருக்கின்றன. இன்னும் விரிவாகதெரிந்துகொள்ள அவரவர் சுய ஜாதகத்தை தங்கள் ஜோதிடரிடம் காட்டி, அதற்கேற்றவாறு கணித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னேற்பாட்டுடன் செய்யக்கூடியது எது; செய்யக்கூடாதது எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பலன்கள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. . எதிலுமே எச்சரிக்கை உணர்வோடு இருந்தோமானால், எவ்வித சோதனைகளையும் வென்று வாகை சூடலாம் அல்லவா? என்வே எடுத்துக்கொள்ள வேண்டிய விதத்தில் எடுத்துக்கொண்டு பயன்பெற வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

2012 ஆண்டு பலன் – அனைத்து ராசிகளும்

நன்றி:முன்றாம் கோணம்

கொஞ்ச நேரம் சிரிக்கணுமா?அதுவும் மனம் விட்டு??அப்போ மேல படிங்க..
“மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க! இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா?”
மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.
வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?
ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.
இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.
பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.
ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.
இப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.
இதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்!

இன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு?

 பத்தாததுக்கு, விஜேய் டிவியிலும் பேட்டிவேறு. இந்தாளுக்கு தன்னை கிண்டல் பண்ணுராங்கள் என்று தெரியாமலா இருக்கு..!!!???

7ம் அறிவு படத்தில் வரும் பாடல்காட்சி ஏற்கனவே இலங்கை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி என இலங்கை நேயர் ஒருவர் சூழுரைத்தார். டைரக்கர் முருகதாஸ் இந்த பாடலைத்தான் காப்பி அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை நேயர் அனுப்பிவைத்த வீடியோ கீழே…(இந்தப்பாடல் காட்சி 7ம் அறிவு திரையிடும் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னராக பதிவேற்றப்பட்டுள்ளது!

முருகதாஸ் எவ்வாறு இந்த பாடல் காட்சி எடுத்தார் என்னும் வீடியோ காட்சி கீழே…

டிசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 362வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 3 நாட்கள் உள்ளன.

  • 1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது.
  • 1612 – கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
  • 1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
  • 1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
  • 1895 – பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
  • 1908 – இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1929 – நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
  • 1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
  • 1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2005 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  •  2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
  • 2007 – நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பிறப்புகள்

  • 1932 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
  • 1937 – ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர்
  • 1940 – அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
  •  1944 – கேரி முலிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
  • 1945 – பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001)
  • 1947 – நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

இறப்புகள்

  • 1994 – கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்

டிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 361வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 4 நாட்கள் உள்ளன.

  • 537 – ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. (ஹேகியா சோபியா துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய ஓதொடொக்ஸ் பிரிவினரின் தேவாலயமாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. கொன்ஸ்தந்தினோப்பிள் வீழ்ச்சியுற்றபோது, இத் தேவாலயத்தை ஓட்டோமான்கள் கைப்பற்றியது, கிறிஸ்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய துன்பியல் நிகழ்வு எனக் கிரேக்க ஓதோடொக்ஸ் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.)
  • 1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
  • 1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
  • 1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1934 – பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
  • 1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1945 – 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
  • 1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • 1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
  • 2007 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

  • 1571 – ஜொஹான்னெஸ் கெப்லர், ஜேர்மானிய அறிவியலாளர் (இ. 1630)
  • 1654 – ஜேக்கப் பெர்னோலி, சுவிஸ் கணிதவியலாளர் (இ. 1705)
  • 1796 – மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869)
  • 1822 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895)
  • 1901 – மர்லீன் டீட்ரிக், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
  • 1965 – சல்மான் கான், இந்தி நடிகர்

இறப்புகள்

  • 1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
  • 1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (பி. 1832)
  • 1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929)
  • 2007 – பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953)

OWL PhoneTicTalk kid cell phoneMigo kid cell phone

“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் ?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான்.

“எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடுங்க அப்பா” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

நம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி !

நாலுவயசுக் குழந்தைக்கா ? தனியே பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள் தான்  இப்போதைய ஹாட் டாப்பிக்.

எதை எப்படி விற்று எவ்வளவு லாபம் பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த வியாபாரிகளுக்குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச் நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள்.

பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள் குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும் போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால்,  இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த செல்போனில் ?. முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம். இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன் நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.

இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.

போதாக்குறைக்கு,  “ஊர்லயிருந்து மாமா பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு கணிசமானது.

மேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்களாம்.

“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு ! குழந்தை கேட்டால் எப்படி மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் !

இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா ? கொஞ்சம் வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.

வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது, உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச் சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி விடவில்லையா ? இவ்வளவு ஏன் ? டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா ?

உண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட் உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில் புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன் பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல் எனும் சர்வதேச சந்தை இணைப்பு !

அதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட் குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் பேசக் கூடும்.

முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை அடையும்போ எப்படி இருக்கும் ? என்னென்ன உடல் நோய்கள் வரும் ? என்னென்ன மன நோய்கள் வரும் ? எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.

விட்டால் “பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா ? “ என ஏதேனும் வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏற்கனவே செல்போன் பயன்படுத்தும் பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம். தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள் பலருக்கும் கவலை இருக்கிறது.

ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும்  பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள்  பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர்.

குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.

 

அடுத்த பக்கம் »