டிசம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 338வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.

 • 1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
 • 1952 – லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1971 – இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
 • 1971 – பாகிஸ்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
 • 1992 – ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
 • 2005 – ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் ஜனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 • 2006 – பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மூதூரில் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

 • 1919 – ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர்
 •  1969 – ஜெய்-சி, அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்
 • 1977 – அஜித் அகர்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

 • 1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900)

சிறப்பு நாள்

 • இந்தியா – கடற்படையினர் தினம்