திங்கள், திசெம்பர் 5th, 2011


கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில்  03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Thanks:http://www.tamilbizcard.com/

டிசம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 339வது நாளாகும். . ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.

 • 1360 – பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1893 – மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகமானது.
 • 1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
 • 1933 – யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
 • 1957 – இந்தோனீசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
 • 1958 – STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

 • 1782 – மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
 • 1901 – வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர் (இ. 1966)
 • 1901 – வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1976)
 •  1966 – தயாநிதி மாறன், முன்னாள் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சர்
 • 1985 – ஜாஷ் ஸ்மித், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்

இறப்புகள்.

 • 1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் தந்தை, (பி. 1822)
 • 1950 – ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)
 • 1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் (பி. 1899)

சிறப்பு நாள்

 • தாய்லாந்து – தேசிய நாள், தந்தையர் நாள்.
 •  பெல்ஜியம், செக் குடியரசு, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் – புனித நிக்கலஸ் மாலை