டிசம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 340வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.

 • 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின்(Encyclopedia Britannica) முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
 • 1865 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
 • 1877 – வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
 •  1897 – வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.
 • 1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது
 • 1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.
 • 1992 – அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
 • 2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

பிறப்புக்கள்

 • 1823 – மாக்ஸ் முல்லர், ஜேர்மனிய மொழியியலாளர் (இ. 1900)

இறப்புகள்  1956 – பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891)

 • 1982 – க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933)
 • 2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் (பி. 1923)

சிறப்பு நாள்

 • புனித நிக்கலஸ் நாள்
 • பெல்ஜியம், நெதர்லாந்து – சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம்
 • பின்லாந்து – விடுதலை நாள் (1917)
 • ஸ்பெயின் – அரசியல் சாசன நாள்