டிசம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 341வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.

  • 1910 – யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
  • 1917 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
  • 1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் “அப்போலோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
  •  1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1988 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  • 1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

பிறப்புக்கள்

  • 1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்கப் பேரறிஞர்

இறப்புகள்

  • 1947 – நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
  • 1956 – லாரி பர்ட், முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர்
  •  1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1895)
  • 1993 – வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
  • 1998 – மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)   [தொகு]

சிறப்பு நாள்

  • ஐக்கிய அமெரிக்கா – பேர்ள் துறைமுக நாள்
  •  இந்தியா – கொடி நாள்