டிசம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 342வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன.

 • 1941 – பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.
 • 1941 – பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
 •  1942 – பெரும் இன அழிப்பு: உக்ரைனின் “டேர்னோப்பில்” என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
 • 1953 – அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
 • 1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

பிறப்புக்கள்

 • கிமு 65 – ஹோராஸ், அகஸ்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் (கிமு 8]]
 • 1935 – தர்மேந்திரா, இந்திய நடிகர்
 • 1946 – சர்மிளா தாகூர், இந்திய நடிகை
 • 1947 – தாமஸ் சிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
 • 1976 – நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை
 • 1985 – டுவைட் ஹவர்ட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

 • 1980 – ஜான் லெனன், ஆங்கிலப் பாடலாசிரியர், இசையமைப்பாளர்
 • (பி. 1940)

சிறப்பு நாள்

 • ருமேனியா – அரசியல் சாசன நாள்
 •  பல்கேரியா – மாணவர் நாள்
 • ஆஸ்திரியா – பொது விடுமுறை
 • மோல்டா – பொது விடுமுறை
 • பனாமா – தாயார் தினம்