டிசம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 343வது நாளாகும். . ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.

  • 1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) – பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
  • 1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினேர்வா” வெளியிடப்பட்டது.
  • 1946 – இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
  • 1953 – ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
  • 1979 – பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
  • 1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
  • 1992 – வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது
  • 1995 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப் பட்டது.

பிறப்புக்கள்

  • 1946 – சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்

இறப்புகள்

  • 2006 – சு. வில்வரத்தினம் (சு.வி.) ஈழத்துக் கவிஞர் (பி. 1950)

சிறப்பு நாள்

  • தான்சானியா – விடுதலை நாள் (1961)
  •  ஐ.நா.சபை – அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் 2003