வெள்ளி, திசெம்பர் 16th, 2011


செல்வன் தினேஸ்Torontoவில் தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளைக்காணும் தினேஸ்,

சகல செளபாக்கியங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்!

டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.

 • 1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
 • 1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
 • 1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.
 • 1920 – சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1925 – இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
 • 1971 – வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
 • 1971 – பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

 • 1770 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)
 • 1866 – வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (இ. 1944)
 • 1917 – ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

 • 1916 – கிரிகோறி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு, (பி. 1869)
 • 1999 – ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர்

சிறப்பு நாள்

 • பாஹ்ரேன் – தேசிய நாள் (1971)
 • வங்காள தேசம் – வெற்றி நாள் (1971)
 • கசக்ஸ்தான் – விடுதலை நாள் (1991)
 • நேபாளம் – அரசியலமைப்பு சட்ட நாள் (1962)