செவ்வாய், திசெம்பர் 20th, 2011


XMas மற்றும் விடுமுறைகால கொண்டாட்டங்களுக்கு பொருட்டளை வாங்குவதற்கு அனைவரும் பெரிய பெரிய Mall களுக்கு சென்று அலைந்து திரிந்து இறுதியில் கால்கள் கடுக்க, களைத்து வீடு சேருவது வழக்கம்.

இவ்வாறான வேளைகளில், என்ன வழிகளை முன்னரே சரியாக திட்டமிட்டால் –  பணத்தையும், நேரத்தையும், உடல் உபாதைகளையும், மன உளைச்சலையும்  குறைத்துக்கொள்ளலாம் என்று இங்கு உள்ள வீடியோவில் பாருங்கள்

டிசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 354வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன.

 • 1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
 • 1844 – இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
 • 1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது
 • 1917 – சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை “சேக்கா” அமைக்கப்பட்டது.
 • 1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
 • 1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
 • 1952 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1960 – வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
 • 1984 – இங்கிலாந்தில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
 • 1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர்.
 • 1988 – போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.
 • 1989 – பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
 • 1995 – அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1999 – போர்த்துக்கல் மக்காவுவை(Macau) மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது.

பிறப்புக்கள்

இறப்புகள்

 • 1998 – அலன் லொயிட் ஹொட்ஜ்கின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)