டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 357வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 8 நாட்கள் உள்ளன

  • 1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • 1948 – பிரதமர் டோஜோ உட்பட ஏழு ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.  1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
  • 1972 – நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
  • 1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
  • 1979 – சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
  • 1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
  •  1990 – 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  2004 – தெற்குப் பெருங்கடலில் உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிறப்புக்கள்

  • 1902 – சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (இ. 1987)
  • 1956 – பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் (இ. 1987)

இறப்புகள்

  • 2004 – பி. வி. நரசிம்மராவ் ஒன்பதாவது இந்தியப் பிரதமர் (பி. 1921)