டிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 361வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 4 நாட்கள் உள்ளன.

 • 537 – ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. (ஹேகியா சோபியா துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய ஓதொடொக்ஸ் பிரிவினரின் தேவாலயமாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. கொன்ஸ்தந்தினோப்பிள் வீழ்ச்சியுற்றபோது, இத் தேவாலயத்தை ஓட்டோமான்கள் கைப்பற்றியது, கிறிஸ்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய துன்பியல் நிகழ்வு எனக் கிரேக்க ஓதோடொக்ஸ் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.)
 • 1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
 • 1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
 • 1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1934 – பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
 • 1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1945 – 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
 • 1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 • 1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
 • 2007 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

 • 1571 – ஜொஹான்னெஸ் கெப்லர், ஜேர்மானிய அறிவியலாளர் (இ. 1630)
 • 1654 – ஜேக்கப் பெர்னோலி, சுவிஸ் கணிதவியலாளர் (இ. 1705)
 • 1796 – மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869)
 • 1822 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895)
 • 1901 – மர்லீன் டீட்ரிக், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
 • 1965 – சல்மான் கான், இந்தி நடிகர்

இறப்புகள்

 • 1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
 • 1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (பி. 1832)
 • 1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929)
 • 2007 – பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953)