கொஞ்ச நேரம் சிரிக்கணுமா?அதுவும் மனம் விட்டு??அப்போ மேல படிங்க..
“மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க! இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா?”
மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.
வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?
ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.
இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.
பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.
ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.
இப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.
இதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்!

இன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு?

 பத்தாததுக்கு, விஜேய் டிவியிலும் பேட்டிவேறு. இந்தாளுக்கு தன்னை கிண்டல் பண்ணுராங்கள் என்று தெரியாமலா இருக்கு..!!!???