தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்:

* ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார்.

* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி! என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விஷ‌யமாகும்.

* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும்.

* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது.