உலக அமைதியை வலியுறுத்தி 96 மொழிகளில் சிலம்பரசன் பாடிய பாடல் இது வரை 3.5 இலட்சம் ஹிட்டுகளை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் சிம்பு – தனுஷ் உறவு பிரசித்தி பெற்றது. ஆங்கில புலமை இல்லாத தனுஷ் தனக்கு தெரிந்த ஒரு சில ஆங்கில வார்த்தைகளை கொண்டு ஒரு பாடலை பாட அது கொலவெறி கணக்காய் ஹிட் ஆகி பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரதமர் விருந்து கொடுக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்று விட்டது.
இச்சூழலில் உலக அமைதிக்காக இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் சிலம்பரசன். காதலுக்கு மொழி இல்லை என்று கூறிய சிலம்பரசன் 96 மொழிகளில் காதல் எனும் வார்த்தையை பயன்படுத்தி இப்பாடலை பாடியுள்ளார்.
மனித குலத்துக்கு இப்பாடலை அர்ப்பணிப்பதாக கூறிய சிம்பு, மேலும் இரண்டு சர்வதேச பாப் பாடகர்களை பயன்படுத்தி இப்பாடலை மெருகேற்ற போவதாகவும் கூறியுள்ளார். சோனி மியூசிக் தயாரித்துள்ள இப்பாடலில் டிரம்ஸ் சிவமணி, தரணி, ராம்ஜி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் உண்டு.
மறுமொழியொன்றை இடுங்கள்