ஜனவரி 6 கிரிகோரியன் ஆண்டின் 6ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 நாட்கள் உள்ளன.

 • 1838 – சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார்.

Samuel Finley Breese Morse (ஏப்ரல் 27, 1791 – ஏப்ரல் 2, 1872) ஒற்றைக்-கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார்.

 • 1900 – போவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிஸ்மித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 • 1928 – தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
 • 1936 – கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

 • 1883 – கலீல் ஜிப்ரான், எழுத்தாளர் (இ. 1931)
 • 1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1965)
 • 1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
 • 1944 – ரோல்ஃப் சிங்கேர்னாகல், நோபல் பரிசு பெற்றவர்
 • 1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

கபில்தேவ் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது அணியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அணியில் ஒரு பல்துறை-ஆட்டக்காராக விளையாடினார். இவர் தேர்வுப் போட்டிகளில் 434 இலக்குகளும் 5,248 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்

 • 1967 – ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்

ரகுமான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்மத்தில் வருமானம் இல்லாதனிலையில் தன் தந்தயின் இசைகருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில்கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார்.

தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.   1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.   முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

 • 1982 – கில்பர்ட் அரீனஸ், அமெரிக்கக்க் கூடைப்பந்து வீரர்

இறப்புகள்

 • 1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809)

 (1809-1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

 லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.

 • 1884 – கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஆஸ்திரியப் பாதிரி, மரபியல் அறிவியலின் தந்தை (பி. 1822)
 • 1918 – கேன்ட்டர், ஜெர்மன் கணிதவியலாளர் (1845  1919 – தியொடோர் ரோசவெல்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1858)  1990 – பாவெல் செரென்கோவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (பி. 1904)
 •  1997 – பிரமீள், ஈழத் தமிழ் எழுத்தாளர்

பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலை, இலக்கியக் கட்டுரையாளர் ஆவார். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பிரமிள், பானுசந்திரன், ஒளரூப் சிவராம் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார்.

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு சென்று விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமீள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர்.

ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமீள், தமிழ் உரைநடை குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.   ஆரம்பக் கல்விச் சான்றிதழ்கூட இல்லாத தருமு சிவராம், தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர். இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.   “கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து கட்டுரை ஒன்றை எழுதினார்.

மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை இவரது கட்டுரைகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.