ஜனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 8வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 நாட்கள் உள்ளன.

  • 1782 – திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
  • 1838 – அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.
  • 1867 – வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
  • 1889 – ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.
  • 1926 – அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.
  • 1940 – இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
  • 1959 – பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.
  • 1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1994 – ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
  • 1996 – சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1867 – எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
  • 1891 – வால்தர் போத், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)
  • 1899 – எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)
  • 1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)
  • 1942 – ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்
  • 1942 – ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்
  • 1976 – பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

இறப்புகள்  1324 – மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)

  • 1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)
  • 1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
  • 1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)
  • 2002 – அலெக்சாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)
  • 2008 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர்