ஜனவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 12வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 353 நாட்கள் உள்ளன.

  • 1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
  • 1915 – அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
  • 1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
  • 2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
  • 2006 – சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்

பிறப்புகள்

  • 1863 – சுவாமி விவேகானந்தர் (இ. 1902)
  • 1899 – போல் ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
  • 1917 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகவாதி (இ. 2008)
  • 1960 – டாமினீக் வில்கின்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
  • 1972 – பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

  • 1976 – அகதா கிறிஸ்டி, ஆங்கில எழுத்தாளர் (பி. 1890)
  • 1997 – சார்ல்ஸ் ஹக்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற கனடிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் (பி. 1901)
  • 2000 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல் தலைவர் (பி. 1920)

சிறப்பு நாள்

  • தான்சானியா: சான்சிபார் புரட்சி நாள் (1964)
  • இந்தியா: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)