ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 13வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 நாட்கள் உள்ளன.

 • 1610 – கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
 • 1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1930 – மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
 • 1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
 • 1939 – அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன காருக்கு காப்புரிமம் பெற்றார்.
 • 1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
 • 1972 – கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
 • 1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.
 • 2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.

பிறப்புகள்

 •  1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
 • 946 – ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
 • 1949 – ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.

இறப்புகள்

 • 1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (பி. 1882)

 

 

Advertisements