ஜனவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 14வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 நாட்கள் உள்ளன.

  • 1539 – ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.  1690 – கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
  • 1761 – இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
  • 1814 – நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
  • 1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
  • 2005 – சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

பிறப்புகள்

  • 1977 – நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர்

இறப்புகள்

  • 1898 – லூயி கரோல் ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர் (பி. 1832)
  • 2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)
Advertisements