ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 15வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350  நாட்கள் உள்ளன.

திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.

 • 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
 • 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
 • 1799 – இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
 • 1892 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
 • 1908 – யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.
 • 1936 – முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.
 • 1943 – பென்டகன் திறக்கப்பட்டது.
 • 1944 – ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
 • 2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
 • 2005 – செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறப்புகள்

 • 1622 – மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர், நடிகர் (இ. 1673)
 • 1866 – நேத்தன் சோடர்புளொம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)
 • 1895 – ஆர்ட்டூரி வேர்ட்டானென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
 • 1908 – எட்வர்ட் டெல்லர், ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)
 • 1923 – ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (இ. 1978)
 • 1926 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
 • 1929 – மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)
 • 1956 – மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி
 • இறப்புகள்
 • 1919 – ரோசா லக்சம்பேர்க், ஜெர்மனிய சோசலிசவாதி (பி. 1870)
 • 1981 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
 • 1988 – ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)
 • 1998 – குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)
 • 2008 – கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)
 • சிறப்பு நாள்
 • மலாவி – யோன் சிலம்புவே நாள்
 • விக்கிப்பீடியா நாள்
Advertisements