ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 நாட்கள் உள்ளன.

 

  • 1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.
  • 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

பிறப்புகள்

  • 1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
  • 1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்

இறப்புகள்

  •  1981 – பாலகிருஷ்ணன், நாதசுரக் கலைஞர் (பி. 1945)
  • 1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

சிறப்பு நாள்

  • ஜிப்ரல்டார் (Gibraltar) – அரசியலமைப்பு நாள்