பெப்ரவரி 3 கிரிகோரியன் ஆண்டின் 34 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 நாட்கள் உள்ளன.

 • 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது
 • 1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 • 1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.
 • 1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
 • 1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
 • 2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

பிறப்புகள்

 • 1898 – அல்வார் ஆல்ட்டோ, கட்டிடக் கலைஞர் (இ. 1976)
 • 1948 – கார்லொஸ் பெலோ, நோபல் பரிசு பெற்ற கிழக்கு திமோர் அரசியல்வாதி
 • 1976 – ஜெ. ராம்கி, எழுத்தாளர்

இறப்புகள்

 • 1855 – டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்
 • 1915 – யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)
 • 1924 – வூட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1856)
 • 1969 – சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)
Advertisements