திருமதி நவரெத்தினம் மங்களாதேவி
மண்ணில் : 12 சனவரி 1956 — விண்ணில் : 22 பெப்ரவரி 2012

வல்வெட்டித்துறை ஆலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் மங்களாதேவி அவர்கள் 22-02-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நாகராசா, வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகராசா நவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாருமதி சுதர்சன்(இலண்டன்), ஜீவன்(இலங்கை), சுஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னராணி(கிளி-இலண்டன்), புவனேஸ்வரி(மயில்-இலங்கை), குயிலம்மா(இலங்கை), காலஞ்சென்ற சபாரெட்ணம் பரமேஸ்வரி, நகுலராசா(நகுலன்-இந்தியா), அர்ச்சுனராசா(சின்னண்ணா-இலண்டன்), தருமராசா(தருமன்-இந்தியா), வீமராசா(குட்டியன்-இலங்கை), அருணாசலம்(அப்புச்சி-கனடா), சகாதேவன்(தேவன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகநாயகி, ஞானசெளந்தரி, வனஜா, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோராணி அவர்களின் அன்பு சம்மந்தியும்,

புவனேந்திரராஜா சுதர்சனன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தருஜன் அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2012 வியாழக்கிழமை அன்று 23/3, 1 வது வீதி, 2 வது ஒழுங்கை, லிங்கநகர், திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தொடர்புகளுக்கு

நவரெத்தினம் — இலங்கை
தொலைபேசி: +94262227108
சாருமதி — பிரித்தானியா
தொலைபேசி: +442086897338
சுதர்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904776526
சுஜீவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778914276
சுஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778808442