பிப்ரவரி 2012


 கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.

முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.

கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.

பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.

இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.

    தண்டாயுதபாணி புஸ்பவதி

மண்ணில் 04.09.1944                             விண்ணில் 03.02.2012

 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்கொண்ட தண்டாயுதபாணி புஸ்பவதி(கிளி) அவர்கள் 03.02.2012ல் இறைபதம் அடைந்தார்

அண்ணார் காலஞ் சென்ற தபால்அதிபர் வேலுப்பிள்ளை தண்டாயுதபாணி அவர்களின் அன்பு மனைவியும்
காலம் சென்றவர்களான நாகரெத்தினம் ரெத்தினம்மா இவர்களின் அன்புமகளும் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை (வேலுமுதலாளி) சம்பூரணத்தின் மருமகளும் காலம் சென்ற மணிமாலையின் பேத்தியுமாவார்.
கிருஸ்ணதாஸ்சின் சகோதரியுமாவார்.
அருந்தவநாயகி சரஸ்வதி இராஜேஸ்வரி மகேஸ்வரி காலம் சென்ற சுசிலா ஆகியோரின் மைத்துனியுமாவார்.
சுரேந்திரன்(வல்வை) காலம்சென்ற மகேந்திரன் காலம் சென்ற கஜேந்திரன் நரேந்திரன்( நரேன் லண்டன்)தமயந்தி (லண்டன்) ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.
சந்திரகுமாரி சதாசிவம் யோகராசன் மேனகா ஆகியோரின் மாமியுமாவார்.
லாவண்யா மயூரன் றோகிலா மாறன் அஞ்சலா யசிகன் ரேனுகா ரோசன் ரோகித் அபினயா லாலினி விவேனிகா சோபியா கிருத்திக் ஆகியோரின் பேத்தியுமாவார்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் மீண்டும் அறியத்தருகிறோம்.
தகவல் பிள்ளைகள்
சுரேஸ் வல்வை-00 94 772097321 – 0094 21 300 7445
நரேன் லண்டன் – 0208 685 9794
தமயந்தி லண்டன் – 0208 648 3846
ஜெயந்தி கனடா – 001 450 689 1546
சகோதரன்
கிருஸ்னதாஸ் வல்வை – 00 94 776258547

பெப்ரவரி 3 கிரிகோரியன் ஆண்டின் 34 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 நாட்கள் உள்ளன.

 • 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது
 • 1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 • 1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.
 • 1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
 • 1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
 • 2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

பிறப்புகள்

 • 1898 – அல்வார் ஆல்ட்டோ, கட்டிடக் கலைஞர் (இ. 1976)
 • 1948 – கார்லொஸ் பெலோ, நோபல் பரிசு பெற்ற கிழக்கு திமோர் அரசியல்வாதி
 • 1976 – ஜெ. ராம்கி, எழுத்தாளர்

இறப்புகள்

 • 1855 – டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்
 • 1915 – யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)
 • 1924 – வூட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1856)
 • 1969 – சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)

வல்வை வேம்படியைச்சேர்ந்த தியாகராஜா சந்திரலிங்கம் (குட்டி) அவர்கள் இன்று சிவபாதம் அடைந்தார்.

          

தோற்றம்14.01.1954                மறைவு 01.02.1912

.

அன்னார் காலம்சென்ற சிதம்பரப்பிள்ளை , இந்தியாவில் வசிக்கும் தியாகராஜா – ராஜலஷ்சுமி அவர்களின் அன்பு மகனும்,

காலம்சென்ற நிர்மலாதேவி,வள்ளிநாயகி,  ஆகியோரின் அன்புக்கணவரும்,

 காலம்சென்ற ஸ்ரீதரன், காலம்சென்ற சசிகலா, ஸ்ரீபாலன், (கனடா) ரமேஸ்,(கனடா) நகுலேஸ்,(அமெரிக்கா)

மாலினி,(வல்வை) நளினி (வல்வை), சுசி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தந்தையும் ,

சந்திரகுமார் (வல்வை) , ராஜசேகரம்(வல்வை), வாசுகி (கனடா), நாகலெட்சுமி (வல்வை) ஆகியோரின் அன்பு மானனாரும்,

புலேந்திரன் (வல்வை), சந்திரகுமார் (நோர்வே), ராஜ்குமார் (இந்தியா),  இந்திராணி(வல்வை) , யோகராணி (கனடா), தங்கராணி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

கந்தசாமி(கனடா), மோகனதாஸ்(கனடா), ஜெயசோதி(கனடா),காலம்சென்ற தேவசிகாமணி, சந்திரசிவா(கனடா), சரோஜினிதேவி(கனடா), புஸ்பராணி(வல்வை), கமலாதேவி(நோர்வே), கலாதேவி(இந்தியா) ஆகியோரின் மைத்துணரும்,

சுகந்தன், சுமன், ஸ்ரீக்குட்டி, அனுஷன், பிரதாப், ஸ்ரீவாணி, சுளசிகா, அச்சுதன், ஜெமிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 02.02.1912 ல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

மகன் ஸ்ரீபாலன் (கனடா ) 1 514 747 9311

மகன் ரமேஸ் (கனடா) 1  905 850 2825

மகள் மாலினி (வல்வை ) 94 772 9 37800

மகள் சுசீலா(அவுஸ்திரேலியா) 61  41  24 7 8648

தம்பி சந்திரகுமார் (நோர்வே) 47 26 30 43 4

தம்பி ராஜ்குமார் (இந்தியா) 91 98 65 86 13 06

அக்கா இந்திராணி (கனடா) 1 905 915 2216

தங்கை தங்கராணி (கனடா) 1 905 850 2825

தங்கை ஆனந்தராணி(கனடா) 1 905 789 0870

பெறாமகன் பிரபு (பிரான்ஸ்) 331 49 441 239

மருமகன் ரகு (ஜேர்மன்) 49 208 43 733

பெறாமகள் சுகந்தி (லண்டன்) 44 208 6870 868

பெறாமகள் சோபனா (பிரான்ஸ்) 33 95 30 24 300

« முன்னைய பக்கம்