மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.

 • 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
 • 1565 – ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.

ரியோ டி ஜனேரோ (போர்த்துக்கீசம்: Rio de Janeiro, அல்லது “ஜனவரியின் ஆறு”) பிரேசிலின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவால் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த போட்டியிட்டதில் கடைசி சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரை தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.

 • 1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
 • 1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
 • 1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.
 • 1873 – முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
 • 1896 – ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

கதிரியக்கம் என்பது சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல்மிகுந்த கதிர்வீச்சு ஆகும். இக்கதிரியக்கக் கதிர் வீச்சானது ஓரளவிற்கு மேல் மாந்தர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், புற்று நோய் முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.

 • 1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.
 • 1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
 • 1912 – முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.
 • 1936 – ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
 • 1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
 • 1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
 • 1975 – ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 • 1977 – சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
 • 1980 – சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
 • 1981 – ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
 • 1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 • 2002 – ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியவை இந்த 12 நாடுகளாகும்.

பிறப்புக்கள்

 • 1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)

எம். கே. தியாகராஜ பாகவதர் – மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 – நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்[1]. தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.

 • 1910 – ஆர்ச்சர் மார்ட்டின், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2002)
 • 1921 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)
 • 1922 – இட்சாக் ரபீன், இஸ்ரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)
 • 1951 – நிதிஷ் குமார், இந்தியாவின் முன்னாள் அமைச்சர்
 • 1953 – மு. க. ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், உள்ளாட்சித் துறை அமைச்சர்
 • 1968 – குஞ்சராணி தேவி, இந்தியப் பழுதூக்கும் வீராங்கனை

இறப்புக்கள்

 • 1940 – அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)
 • 1995 – ஜோர்ஜஸ் கோஹ்லர், ஜேர்மானிய உயிரியலாளர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1946)

சிறப்பு நாள்

 • பொசுனியா எர்செகோவினா – விடுதலை நாள் (1992)
 • தென் கொரியா – விடுதலை நாள்
Advertisements