தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு படும்பாடு அனுபவித்தவர்களுக்கு தெரியும்!

  • இடம் இல்லாமல் சுத்தித்திரிதல்
  • மட்டுமட்டான இடத்தில் நாமோ அல்லது அடுத்தவரோ சற்று இடித்து, உரசும் விடயம்
  • ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சமூக விரோதிகளின் பயம்
  • Parking Lot ல் இருந்து வெறியேறுவதற்குள்ள சிரமம்
  • வாகனம் களவாடப்படுதல்
  • விலை மதிப்புமிக்க பொருட்கள் களவாடப்படுதல்…..

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்! பொதுவாக கவனித்துப் பார்த்தோமானால், வியாபார நிலையங்களோ, சினிமா தியேட்டர்களையோ எடுத்துப்பார்த்தால்,  இவற்றின் அளவைவிட Parking Lot ன் அளவு பெரிதாக இருக்கும்! முக்கிய நகரங்களில் இது ஒரு மிகப்பெரிய இட நெருக்கடி சிக்கல். இவற்றிற்கெல்லாம் முடிவுகட்டும் முகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த Robotic Parking வசதி!

இதன்மூலம் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையான வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தமுடியும். தரைக்கு மேலேயோ அல்லது தரைக்கு கீளேயோ இவ்வகையான Robotic Parking களை அமைக்க முடியும்.

ஏற்கனவே Tokyo, Dubai, London, New York போன்ற நகரங்களில் இவ்வகை  Robotic Parking வசதிகள் உள்ளன. அண்மையில் கனடாவில் முதல் முதலில் Vancouverரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் Torontoவில் இத்தகைய Robotic Parkingகுகள்  வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த Robotic Parking எவ்வாறு வேலைசெய்யும் என்று கீளே உள்ள வீடியோக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.