3 மில்லியன் பெறுமதியான லூனி (1$) மற்றும் டூனீ (2$)க்கள் கனடாவின்  இரண்டு இடங்களுக்கு இடையில் communities of Ramore and Kirkland Lake என்னும் இடத்தில் உள்ள வீதியில் கொட்டிச்சிதறியது. பணத்தினை கொண்டுசெல்லும்  Brinks security truck வாகனம் அதிகாலை 4 மணியளவில் வீதியின் நடுக்கோட்டினை தாண்டி எதிரே இருந்த குன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த நாணயக்குத்திகள் அவ்வீதியெங்கும் கொட்டிச்சிதறியது. இவ்வேளை எதிரே வந்த இன்னுமொரு tractor-trailer வாகனம் இந்த வாகனத்துடன் மோதியதில் வாகனத்தில் இருந்த கன்டிக்கள் (candy) அவ்விடத்தில் கொட்டிச்சிதறியது. (கன்டிக்களுக்கும், காசுகளுக்கும் அவ்வளவு காதலா?)

சுமார் 3மில்லியன் ( 390 கோடி இலங்கை/ 153 கோடி இந்திய ரூபாய்க்கள்!)  நாணயங்களை தனியார் நிறுவனங்களின் உதவிகொண்டு காந்த பாரம் தூக்கியின் உதவியுடன் அள்ளிவருகின்றனர்.  அவ்வேலையைச் செய்பவர்கள் நாணயங்களை நாணயத்துடன் சேகரிக்கின்றனரா என்று கண்காணிக்க நாணயமான பொலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்!.

 Brinks security truck வாகன சாரதியும், அருகில் இருந்த பாதுகாவலரும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனடிய வரலாற்றில் “சுவையான+பெறுமதிமிக்க” விபத்து என்று இதனைச் சொல்லலாம்!