வரும் இலையுதிர் காலத்தில் கனடா தனது 1 சதம் நாணயம் உருவாக்குவதை நிறுத்த உள்ளது. தற்போது ஓட்டாவாவில் உள்ள Royal Canadian Mint  என அழைக்கப்படும் நாணயங்களை உருவாக்கும் இடத்தின்  President உம் CEO வுமான  Ian E. Bennett கூறுகையில், தற்போதுள்ள தொழிலாலர்களின் சம்பளம், உல்லோகங்களின் விலை உயர்வு என்பன ஒரு சதத்தைனை உருவாக்குவதற்கு 1.6 சதம் செலவாகின்றது என்றும். இது மற்றய ஏனைய நாணையங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் பொறுமதியினை விட குறைந்த செலவே ஏற்படுகின்றன என்றார்.

 கடந்த காலங்களில் 35 நாடுகள் 1 சதத்தினை பாவனையில் இருந்து விலக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இனி பொருட்களின் விலையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படும். உதாரணமாக ஒரு பொருள் 2.99 ஆக உள்ளது இனி 3.00 ஆகவும், 2,92 ஆக உள்ளது 2,90 ஆகவும் கொண்டுவரப்படும். நுகர்வோர் இனி 5 சதங்களின் மடங்குகளாகவே பொருட்களுக்கு பணம் கொடுக்க வேண்டிவரும்.