மார்ச் 2012


சண்முகவேல் ரத்தினவேல்

(இளைப்பாறிய தபால் ஊழியர்)

பிறப்பு: 21.06.1941                 மறைவு: 23.03.2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்கொண்ட இளைப்பாறிய தபால் ஊழியர் சண்முகவேல் ரத்தினவேல் அவர்கள் 24/03.2012 அன்று பருத்தித்துறையில் காலமானார். அன்னார் காலம்சென்றவர்களான சண்முகவேல் செல்வநாயகி அவர்களின் புதல்வனும்,

காலம்சென்றவர்களான சிவசாமி மாதவிப்பிள்ளை அவர்களின் மருமகனும், கமலாதேவியின் அன்புக்கணவரும், பழனிவேலின் சகோதரரும், ஜெயகெளரி, பாலேந்திரா, ஜெயசீதா, ஜெயராணி, அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலசுப்ரமணியம், சியாமளா, சிவசோதி, இரதீஸ்வரன் அவர்களின் மாமனாரும், நந்தினி மாதவன், சிவச்செல்வன், ஜெயம், ஶ்ரீராம், ஶ்ரீகரி, குபேரன், கீர்த்திகா, கம்ஷனா, ஜதூஷனா, சந்துரு ஆகியோரின் பேரனும், ஐங்கரனின் பூட்டனுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் இன்று மாலை (24.03.2012) வல்வெட்டித்துறையில் நடந்தேறியது.

தொடர்புகளுக்கு:

பாலு (மகன்) +94 77 202 5774

கெளரி (மகள்) +94 75 039 7479

பழம் (மகள்) +94 21 490 9119

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன் 
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என்  விழி  தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது

கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது

தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலானேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே

ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்
வந்து மோதிய இருந்த மேகமே
தேகம் தேயும் நிலவானதே

காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்ச்சிலையை போலே நெஞ்சு அசையாது
சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய்
ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல

வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது…………

தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு படும்பாடு அனுபவித்தவர்களுக்கு தெரியும்!

  • இடம் இல்லாமல் சுத்தித்திரிதல்
  • மட்டுமட்டான இடத்தில் நாமோ அல்லது அடுத்தவரோ சற்று இடித்து, உரசும் விடயம்
  • ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சமூக விரோதிகளின் பயம்
  • Parking Lot ல் இருந்து வெறியேறுவதற்குள்ள சிரமம்
  • வாகனம் களவாடப்படுதல்
  • விலை மதிப்புமிக்க பொருட்கள் களவாடப்படுதல்…..

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்! பொதுவாக கவனித்துப் பார்த்தோமானால், வியாபார நிலையங்களோ, சினிமா தியேட்டர்களையோ எடுத்துப்பார்த்தால்,  இவற்றின் அளவைவிட Parking Lot ன் அளவு பெரிதாக இருக்கும்! முக்கிய நகரங்களில் இது ஒரு மிகப்பெரிய இட நெருக்கடி சிக்கல். இவற்றிற்கெல்லாம் முடிவுகட்டும் முகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த Robotic Parking வசதி!

இதன்மூலம் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையான வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தமுடியும். தரைக்கு மேலேயோ அல்லது தரைக்கு கீளேயோ இவ்வகையான Robotic Parking களை அமைக்க முடியும்.

ஏற்கனவே Tokyo, Dubai, London, New York போன்ற நகரங்களில் இவ்வகை  Robotic Parking வசதிகள் உள்ளன. அண்மையில் கனடாவில் முதல் முதலில் Vancouverரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் Torontoவில் இத்தகைய Robotic Parkingகுகள்  வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த Robotic Parking எவ்வாறு வேலைசெய்யும் என்று கீளே உள்ள வீடியோக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அருமையான வரிகள்

இனிமையான குரல்

மென்மையான இசை

காதுகள் களவு போகாமல் பார்த்து கொள்ளுங்கள்

அன்னையின் மடியில் 04.09.1981         ஆண்டவன் அடியில் 16.03.2012

வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயராசா நிலானி அவர்கள் 16.03.2012 அன்று அகால மரணமானார்.
அன்னார் துரைராசரெட்ணம் தயாநிதி தம்பதிகளின் (கனடா) அன்பு மகளும், வினாயகமூர்த்தி மகாலெட்சுமி தம்பதிகளின் (இலங்கை) பாசமிகு மருமகளும்,
ஜெயராசா (வெள்ளிப்பவுண்) அவர்களின் அன்பு மனைவியும், யோசனாவின் பாசமிகு தாயாரும்.
நவநீதன் (லண்டன்) சத்தியவதனியின் (சுவிஸ்) அன்புச் சகோதரியும்.
லலிதா (லண்டன்) செல்வதயாளன் (மாறன்)(சுவிஸ்) காலஞ்சென்ற யோகராசா செல்வராணி (இலங்கை) புஸ்ப்பராணி (சுவிஸ்) சிவராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்.
வினு, திவ்வியா அகியோரின் பாசமிகு அத்தையும் ரிசோத், சுபோத், சுயித் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்.
குடும்பத்தார்
தொடர்புகளிற்கு
ஜெயராசா (கனடா) 0015148007465
நவநீதன் (லண்டன்) 00447957911649
மாறன் (சுவிஸ்) 0041628226706
துரைராசரெட்ணம் (கனடா) 0015143430722

புதிய பத்தாண்டு சிறப்பு நுழைவுரிமை  கனடாவில் அறிமுகம்!

பணிநிமித்தமாக, கனடாவிற்கு சென்று தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கனடா அரசு “சூப்பர் விசா” (சிறப்பு நுழைவுரிமை)என்ற ‌பெயரிலான புதிய விசாவை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.  முதற்கட்டமாக, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டதாக இந்த விசா வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கனடிய நாட்டு மக்களின் கோரிக்கையை அடுத்து பெற்றோர் மற்றும் தாத்தா , பாட்டிமார்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் விசாவின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இந்த விசாவை புதுப்பிக்கும் காலத்தில், 1 ஆண்டு வரை அவர்கள் கனடா நாட்டில் தங்க எவ்வித தடையுமுமில்லை. இந்த விசாவிற்கு விண்ணப்பித்து, 8 வார கால அளவில் சூப்பர் விசாவை பெறக்கூடிய வ‌கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜசோன் கென்னி தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும் ஆண்டுக்கு 40,000 விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு வந்ததாலேயே இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்   கனடிய குடிவரவுத்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

2012 ஆம் ஆண்டிற்கான நிதி சட்டமூலம் எதிர் வரும் மார்ச் 29 ஆம் திகதி  சமர்பிக்கபட உள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் நிதி அமைச்சகம் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. விண்ணப்பிக்காத வாடிக்கையாளர்களை தூண்டும் வகையில் அவர்களுக்கு கடன் அட்டை காசோலைகளை வங்கிகள் இனி அனுப்புவதற்கு தடை விதிக்கப்படும் என அமைச்சரவை நிலை நிதியமைச்சர்   திரு.Ted Menzies நேற்று அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தாங்களாகவே கோரிய பின்னரே அவர்களுக்கான சேவையளிக்க கடன் அட்டை வழங்கும் வங்கிகள் முன்வர வேண்டும் எனபதையும் தெளிவாக கூறியுள்ளார்.

கடன் அட்டை காசோலை என்பது முன்பணம் கொடுப்பதற்கு சமானமானது என்பதால் இதற்கு வங்கிகள் அதிகப்படியான கட்டணங்களையும் , அதிக வட்டி விகிதங்களையும்  நிர்ணயித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  காசோலைகளை பணமாக்காமல் வங்கிகள் தங்களிடத்தில் நீண்ட நாள் வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பட்சம் 4  வேலை நாட்களுக்கு மேல் காசோலைகளை வைத்திருக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. அதே போன்று கடன் வழங்கும் நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெறுவோரிடம் அபராதம் கட்டுவதை தவிர்க்கும் படி விரைந்து கடன்களை செலுத்த என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் அனைத்தையும் தெளிவாக விளக்கிய பின்னரே கடன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »