ஏப்ரல் 7 கிரிகோரியன் ஆண்டின் 97ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 98ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

 • 1795 – பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.
 • 1827 – ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
 • 1927 – முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.
 • 1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை வரைந்தார்.

வால்ட் டிஸ்னி (டிசம்பர் 5 , 1901 – டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி (தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது  ஓர் உலகசாதனை. இதனால்  இவரே  மற்றவரை  விட  அதிக நியமனங்களும், விருதுகளும் பெற்றார். ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

ப்ளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

 • 1943 – யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
 • 1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
 • 1948 – உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.
 • 1948 – சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.
 • 1963 – யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.
 • 1964 – ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.
 • 1978 – யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
 • 1978 – நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.
 • 1983 – ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
 • 1989 – கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1992 – ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.
 • 1994 – ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
 • 2001 – மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.
 • 2003 – அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.
 • 2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

 • 1920 – ரவி சங்கர், சிதார் கலைஞர்

இறப்புகள்

 • 2006 – வ. விக்னேஸ்வரன், தமிழீழ மாமனிதர் விருது பெற்றவர்.

சிறப்பு நாள்

 • உலக சுகாதார நாள்

உலக சுகாதார நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

 

maple leaf Today's Canadian Headline...