புதன், ஏப்ரல் 11th, 2012


ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
எனையும் தான் உனைப்போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக்கொலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் …உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர் பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..
வா வா
ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஆகா ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை ..பட்டர்பிளை …

ஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டின் 101ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.

 • 1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
 • 1899 – ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
 • 1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
 • 1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
 • 1955 – ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
 • 1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.
 • 1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
 • 1981 – தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
 • 1987 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

பிறப்புகள்

 • 1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)
maple leaf Today's Canadian Headline...