ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.

 • 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.

இழ்சாக் கார்ட்டியே (ஜாக் கார்ட்டியே Jacques Cartier, டிசம்பர் 31, 1491–செப்டம்பர் 1, 1557) ஒரு புகழ்பெற்ற பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (explorer). இவர் இன்றைய கனடா நாட்டினை முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு அறிவித்து பிரான்சின் உடைமையாக உரிமை வேண்டினார். கனடாவில் உள்ள செயின்ட் லாரன்சு வளைகுடாவையும், செயின்ட் லாரன்சு ஆற்றையும் முதன் முறையாக விளக்கி அதன் நில வரைபடங்களை உருவாக்கினார். லாரன்சு ஆற்றுக் கரைப்பகுதியிலும், ஓக்கெலாக (Hochelaga) (மான்ட்ரியால் தீவு) ஊர்ப் பகுதியிலும், சிட்டாடகோனா (Stadaconna) (கியுபெக் நகரம்) ஊர்ப்பகுதியிலும் வாழ்ந்த செயின்ட் லாரன்சு இரோக்குவா மக்களையும், அந்நிலப்பகுதியையும் “கனடா நாடு” என்று அறிவித்தார்.

 
 

 • 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
 • 1792 – பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
 • 1862 – லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895).நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாலர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார்.நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது.இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றது என்று அறிந்தார்.

இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.

 • 1902 – பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
 • 1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1926 – திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
 • 1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
 • 1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
 • 1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1972 – அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
 •  

பிறப்புகள்

 • 570 – முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப்படவில்லை)
 • 1808 – மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
 • 1889 – அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945)
 • 1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
 • 1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
 • 1950 – நா. சந்திரபாபு நாயுடு, இந்திய அரசியல்வாதி