ஏப்ரல் 2012


ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.

 • 1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
 • 1912 – ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
  ஆங்கிலக் கால்வாய் (English Channel) அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்
 • 1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்

 • 1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
 • 1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

 • 1851 – சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
 • 1867 – வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)
 • 1889 – சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)
 • 1927 – திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தை.
 • 1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
 • 1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி

இறப்புகள்

 • 1908 – அப்புக்குட்டி கிங்ஸ்பரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர்.

சிறப்பு நாள்

 • சிரியா – விடுதலை நாள் (1946)

திரு வேலுப்பிள்ளை சிவகுருநாதன் 
 

தோற்றம் : 10 யூன் 1930 — மறைவு : 11 ஏப்ரல் 2012

யாழ். வல்வெட்டித்துறை நெற்கொழு வீதியை பிறப்பிடமாகவும் 103, சிக்நெட் காசில் 30/2 வால்மீகி தெரு, திருவான்மியூர் சென்னை -41 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 11-04-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை, செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், வடிவேல் சின்னமயில் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி(கமலாதேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

தேவராஜன்(லண்டன்), குமாரதேவன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீஜெயந்தி(இலங்கை), சிவகுமாரன்(லண்டன்), ஸ்ரீபவானி(சென்னை),ஸ்ரீலக்ஷ்மி(லண்டன்), அருட்சிவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வனசாட்சி, கமலாதேவி, சிவயோகநாதன், சிவலோகநாதன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராமசூரியன், சிவசுந்தரம், சந்திராவதி, பத்மாவதி, காமாட்சிசுந்தரம், நித்தியா, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபத்திரா, விஜிதா, இராஜகுமாரன், சுகந்தி, முரளிதரன், சிவகுமார், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலீபன், நிரோசன், அபிஷேக், அசோக், செந்தில்குமாரன், ஸ்ரீராஜேஸ்வரி, சிவராம், மீரா, குமரன், முகிலன், தமிழினி, கமலினி, யாதவன், யாழினி, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 15-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 9:00 மணியளவில் பெசன் நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

இந்தியா தொலைபேசி: +914442158782
தெவராஜன் — பிரித்தானியா தொலைபேசி: +442083304670
குமாரதேவன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61393699616
பரீபவான் — இந்தியா தொலைபேசி: +914424419973
ஸ்ரீலஷ்மி — பிரித்தானியா தொலைபேசி: +442083955904
சிவகுமாரன் — பிரித்தானியா தொலைபேசி: +442086804281
அருட்சிவன் — பிரித்தானியா தொலைபேசி: +442086402367
சிவலோகநாதன் — சுவீடன் தொலைபேசி: +4658413077
 

திரு கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம்
(Captain Tharma – கட்டி அத்தான்)
மலர்வு : 5 யூன் 1945 — உதிர்வு : 13 ஏப்ரல் 2012

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 13-04-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை(பொன்னுக்கண்டு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை(இராமநாதன் மேஸ்திரியார்), வள்ளிக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாவதி(லண்டன்), விக்னேஸ்வரன்(சுரேஸ் – லண்டன்), பிறேமாவதி(சாரதா – லண்டன்), ஜெயகுமார்(ரமேஸ்) ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தசாமி(குட்டிக்கிளி), யோகானந்தசாமி(தங்கக்கிளி) மற்றும் நாகேஸ்வரி(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ஹரீந்திரன், கரன், ஜெயலிங்கம், உமாசிறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலங்கேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரவணபவானந்தவேல், சந்திரகுமாரி, கணேசமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலகுமாரி, வசந்தகுமாரி, சபானந்தமூர்த்தி, கிருஷ்ணகுமாரி, உதயகுமாரி, ஜெயகுமாரி, காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேமானந்தன், லிஷாந்தி, செல்வானந்தன், வைஷ்ணவி, வித்தியா, அருணன், சிவானி, வர்ணிகா ஆகியோரின் ஆசைமிக்க பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் பெரியதம்பிரான் கோவிலடி பொலிகண்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி – மனைவி(வல்வை) — இலங்கை செல்லிடப்பேசி: +94772881188
கமலாவதி – மகள் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447896769719
விக்னேஸ்வரன் – மகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447875088730
பிறேமாவதி – மகள் — பிரித்தானியா தொலைபேசி: +442086487109
ஜெயலிங்கம் – மருமகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447958652647

இன்று பிறக்கும் நந்தன ஆண்டில் இடம்பெற்ற ஒரு சுவார்சியமான பட்டிமன்றம்.
Part one

Part two

ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
எனையும் தான் உனைப்போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக்கொலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் …உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர் பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..
வா வா
ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை …
ஏன் விரித்தாய் சிறகை ..
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஆகா ஒ பட்டர்பிளை …பட்டர்பிளை ..பட்டர்பிளை …

ஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டின் 101ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.

 • 1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
 • 1899 – ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
 • 1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
 • 1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
 • 1955 – ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
 • 1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.
 • 1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
 • 1981 – தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
 • 1987 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

பிறப்புகள்

 • 1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)
maple leaf Today's Canadian Headline...

மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டின் 69ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன.

 • 1629 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
 • 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
 • 1804 – லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 • 1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
 • 1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
 • 1902 – அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 • 1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.
 • 1906 – வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
 • 1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
 • 1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.
 • 1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
 • 1952 – கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.
 • 1959 – திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை சீன இராணுவத்தினரால் செய்யப்பட்டனர்.
 • 1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
 • 1982 – கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.
 • 1990 – ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

பிறப்புக்கள்

 • 1933 – பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய ஆதரவாளர்.
 • 1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)
 • 1957 – ஒசாமா பின் லாடன், இஸ்லாமியப் போராளி

இறப்புக்கள்

 • 2001 – சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)
 • 2006 – சி. புஷ்பராஜா, ஈழத்தில் மாணவர், இளைஞர் பேரவைகளில் முக்கிய பங்காற்றிய போராளி

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »