கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 2012 ஆண்டுக்குரியவது விருதினைப் பெற்ற ஆறு சாதனையாளர்கள்!
 
கனடிய வர்த்தகத் தமிழ் மக்களிடையே சாதனைப் படைத்த ஆறு தொழிலதிபர்கள் இந்த ஆண்டுக்குரிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றனர். மார்க்கம் ஹில்ரன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கனடாத் தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

“ தமிழ் மக்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தமது கடின உழைப்பால் தமிழ் சமூகத்துக்கு மாத்திர மன்றி கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினருக்கும், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி வருகின்றார்கள் என கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு மைக் அகிலன் தெரிவித்தார். கனடா வர்த்தகத் துறையில் சாதனை படைத்த தமிழ் வர்த்தகர்களுக்கா கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இதனைத்தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அதன் காரணமாக வர்த்தகத்துறையில் துரித வளர்ச்சி அடைந்த தமிழ் பிரமுகர்களை வருடா வருடம் தெரிவு செய்து அவர்களுக்கு எமது சம்மேளளனம் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. எமது இந்த முயற்சிக்கு றோயல் வங்கி, சி.பி.சி.வங்கி, ரி.டி.வங்கி, நோவஷ்கோசியா வங்கி ஆகியன ஆதரவளித்து வருகின்றன. அவர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறினார்.

      

இவ்விழாவின் போது இந்த ஆண்டுக்குரிய தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது (Most Outstanding Professional Award) மின்னியல் பொறியியல் தொழில் அதிபரான ஜோர்ஜ் செல்வநாயகம் அவர்களுக்கும், சிறந்த தொழில் முனைவோர் விருது (Best Entrepreneur Award)பார வண்டி பொறியில் துறை தொழில் அதிபரான அழகரட்னம் உதயகுமார் அவர்களுக்கும் , தனி சிறப்பு விருது (Award of Excellence) கட்டிடத் துறை ஆலோசனைத் துறையைச் சேர்ந்த “கன்ரெம் குறூப்” யசோ சொர்ணலிங்கம் அவர்களுக்கும், சிறந்த இளையோர் தொழில் முனைவோர் விருது (Young Entrepreneur Award)அச்சகமும், புகைப்படத் துறையைச் சேர்ந்த “பிறின்ற் பாஸ்ற்” உரிமையாளர் துரைரட்ணம் துஷ்யந்தன் அவர்களுக்கும், பெண்களுக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது (Women Entrepreneur Award) தேவிக் பார்மா இங்” மருந்தக உரிரமையாளரும் நோர்த் அமெரிக்கன் பார்மகியுடிக் டெக்னோலொஜி நிறுவனரும் தலைவருமான பெண் தொழில் அதிபர் ரதி பரமசாமி அவர்களுக்கும், தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது, தலைசிறந்த சமூக சேவையாளர் விருது துறையில் தமிழர் ஐக்கிய சங்கத்தினை உருவாக்கிய குருசாந்தமூர்த்தி யோகராஜா அவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌர விக்கப்பட்டது.